பல்லவி

சாமத்து ரோசாப்பூவு
உன்ன யெண்ணி வாடுதய்யா

உன்னைக் காணாமல் கண்ணுரெண்டும்
வீதியெல்லாம் தேடுதையா…

கண்ணீரு ஒன்னாகக் கூடுதையா…

கரைபுரண்டு வெள்ளமா ஓடுதையா…

      ( சாமத்து ரோசாப்பூவு)

அனுபல்லவி

முத்து முத்தாப் பேசினீயே
முத்தங்கள் அள்ளி வீசினீயே
கொத்துமல்லி கொண்டையிலே
கோலமிட்டு வாழ்த்துனீயே

உன்னயெண்ணி உள்மூச்சி வாங்குதையா
என்னுள்ளம் அலைபாய்ந்து ஏங்குதையா

கண்ணுறக்கம் இல்லாம நெஞ்சு துடிக்குதையா

நெஞ்சுக்குள்ள உன் நெனப்பு
பஞ்சா வெடிக்குதையா…

      (சாமத்து ரோசாப்பூவு)

சரணம்

பட்டு மெத்தயில பாய்விரிச்சி
பால் நிலவு காயுதையா…

சொப்பனத்தில் நீயும் வந்தா
பாவி மனம் வேகுதையா…

உன்மடியில் என்னுசுரு போகட்டுமே…
கோடியுகம் நம் காதல் வாழட்டுமே…

அக்கம் பக்கம் பாத்துக்கிட்டு ஆசைகள் கூடுதையா…
தென்றலோடு பேசிக்கிட்டு தாகமும் தீருதையா…

      (சாமத்து ரோசாப்பூவு)


4 Comments

செல்வகுமாரி · செப்டம்பர் 27, 2017 at 3 h 39 min

Very nice song

முகம்மது அலி ஜின்னா · செப்டம்பர் 28, 2017 at 2 h 59 min

சிறந்த கவிதையை இனிய குரலில் கேட்க மனம் நிறைகின்றது / வாழ்த்துக்கள்

? · செப்டம்பர் 28, 2017 at 5 h 56 min

மகிழ்ச்சி மிக்க நன்றிகள் கோடி

? · செப்டம்பர் 28, 2017 at 15 h 25 min

அருமை…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.