வாய்க்கா கரையோரம்
வரப்பு மேட்டோரம்
ஒத்தமாட்டு வண்டியிலே
ஒத்தையடி பாதையிலே
ஒண்டியா போகையிலே
ஓரம் போறம் பாக்கையிலே
மச்சான நினக்கியிலே
தடமும் தெரியல நேரமும் தெரியல!

சின்னாள பட்டு சேலையே
இடுப்புலதான் சொறுகையிலே
மச்சானின் நெனைப்பையும்
சேத்துதான் சொருகுனேன்
கோடாலி கொண்டையிலே
மருக்கொழுந்து வெக்கையிலே
மச்சானின் வேர்வை சொகம்
வேகமா வந்துருச்சே!

கள்ளிப் பழக் காட்டுக்குள்ளே
கடிச்சுக் கொஞ்சம் பாத்தேனே
பரிசம் போடும் முன்னால
நெனச்சுப் பாத்து கொஞ்சையிலே
தித்திப்புதான் பத்தலையே
வெள்ளரி கடிக்கையிலே
உம் முத்துப் பல்லதான்
நெனச்சுப் பாத்து சிரிச்சேனே!

அரளிப்பூ ஆடையிலே
செவத்த மச்சான் மூஞ்சிய
நாங்கண்டு ரசிச்சேனே
நெல்லு நாத்தெல்லாம்
நீ சாஞ்சு நடந்தாப்புல
என்னைப் பாத்து ஆடுதே
சீண்டி போன ஊதாக் காத்தும்
இடுப்புச் சதை குறுகுறுக்க
அகத்திக் கீரை ஆயலையிலே
கொஞ்சப்போயி கடிச்சுவைக்க
தன்னந்தனியா இந்தச் சிறுக்கி
மனசுக்குள்ளே கிச்சு கிச்சு!

கடகடன்ன்னு பாதையிலே
வண்டிச் சத்தம் கேக்கையிலே
விவரங்கெட்ட மனுஷன்
விலகிப்போன துணியைப்பாத்து
குறும்போட கொக்கரிச்சான்
தன்ன மறந்து கத்தியில
விரலைத்தான் அறுத்துக்கிட்டேன்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.