நாராயணன் பதினொன்றாம் வகுப்பில் வேற்றுப் பள்ளியில் இருந்து எங்கள் பள்ளியில் சேர்ந்த புதிய மாணவர். அன்று வகுப்புக்கு வெளியே நின்றுகொண்டு இருந்தான். அவனுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர் என்பதால் “என்ன நடுத்தெரு நாராயணன், C/O வரண்டாவா? என்று சொல்லிக்கொண்டே சென்றேன். கணித ஆசிரியரின் கட்டளையை ஏற்று வெளியில் நின்ற அவன் தன் தண்டனையையும் மறந்து சிரித்தான். அன்று முதல் நாராயணனுக்கு என்னிடம் ஒரு நெருக்கம் ஏற்பட்டது. அதன்பின் என்னை அடிக்கடி சந்திப்பது உண்டு.

அப்படி ஒரு சந்திப்பில் நாராயணன் கூறியது என்னை சற்று சிந்திக்க வைத்தது. மற்ற மாணவர்கள் எல்லோரும் விரைவாக கணக்குகளைப் போடும்போது என்னால் மெதுவாகத்தான் போட முடிகிறது. மெதுவாக போட்டாலும் சமயங்களில் தவறாகவும் ஆகிவிடுகிறது. இதனால் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்று தண்டனையும் பெறவேண்டியுள்ளது. இந்நிலையில் கணக்கு ஆசிரியர் விடை தெரியாத என்னையே கேள்வி கேட்கிறார் எனக்கு அவமானமாக உள்ளது. தொடர்ந்து வந்த தேர்வுகளில் பெயில் மார்க் எடுத்தால் கணக்கு ஆசிரியர் தன்னை தனியாக அழைத்து நீ டி.சி வாங்கிக்கொண்டு வேறு பள்ளியில் சேர்ந்து விடு என்று கூறுவதாக சொன்னான். மேலும், இப் பள்ளியில் தனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தனது படிப்பில் உதவி செய்வதாகவும் சொல்லி மகிழ்ந்தான். தான் முன்பு படித்த பள்ளியில் இருந்த சூழலே வேறு. எவரும் ஒருவரோடு ஒருவர் பழக இயலாது என்றும் ஓய்வு நேரங்களில் கூட. மன அமைதியோடு இருக்க முடியாது என்றும் கூறி வருத்தப்பட்டான். அப் பள்ளியில் கட்டணம் அதிகம் அங்கு 11 ஆம் வகுப்பில் தாங்கள் கேட்ட குரூப் கொடுக்கவில்லை அதனால் இப்பள்ளியில் வந்து சேர்ந்தேன். என்னை எங்குமே படிக்க விடமாட்டார்கள் போல் இருக்கிறது என்றான் நாராயணன்.

நாரயணனின் தன் தவறை ஒத்துக்கொள்ளக் கூடிய பண்பையும் தனது தவறை ஆசிரியர் மீது சுமத்தாத பண்பையும் கண்டேன். நாராயணன் மற்ற பாடங்களில் நல்ல மதிப்பெண் பெறுவதாகத்தான் கேள்விப்பட்டேன். அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று யோசிக்க வேண்டியும் இருந்தது.

“கணக்கு ஆசிரியர் விஷயத்தில் நீ சந்தோஷப் படவேண்டும் என்றேன். எத்தனையோபேர் மீது அக்கறை எடுத்துகொள்ளாத பல ஆசிரியர்கள் உள்ளபோது உன் மீது அக்கறை எடுத்துக்கொள்ளும் கணக்கு ஆசிரியரை நீ பாரட்ட வேண்டும். அவர் உன்னை யார் என்று தெரிந்திருக்கிறார் உன்னை கேள்வி கேட்பதன் மூலம் உனது முன்னேற்றத்தை கவனிக்கிறார் என்று அர்த்தம். இப்படி ஒரு நல்ல ஆசிரியர் இருக்கும்போது நீ கவலைப் படவேண்டாம். அதிக நேரம் எடுத்து பயிற்சி செய் முயற்சி செய்தவன் தோற்றதில்லை. ஆசிரியர் சொல்லும் எதையும் நேர்மறையாக எடுத்தக்கொள் “ என்று சொல்லிவைத்தேன். நாராயணனுக்கு புரிந்ததோ இல்லையோ நான் ஒரு நம்பிக்கையை அவனுள் விதைத்தாகவே எண்ணினேன்.

ஒருநாள் பெற்றோர் ஒருவர் என்னை சந்திக்க வந்திருப்பதாக ஆசிரியர் ஓய்வு அறையில் இருந்த என்னிடம் சொன்னார்கள். ஒரு பெண் தன்னை நாராயணின் அம்மாவென்று அறிமுகம் செய்து கொண்டார்கள். “முன்பெல்லாம் புத்தகத்தையே எடுக்கமாட்டான். வேற ஸ்கூல்ல அப்பாவை சேர்த்துவிட சொல்லுன்னுதான் சொல்வான். இதைக்கேட்ட அவுங்க அப்பா எந்த ஸ்கூலும் வேணாம் எனோட பிசினசை பர்க்கசொல்லுன்னு கோபமா கூட சொன்னார். உங்களிடம் சுதந்திரமாக பேச ஆரம்பித்ததும். உங்களைப் பற்றிதான் பேசுவான். அவனிடத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. உங்களை அவனுடைய ரோல் மாடலா நினைக்கறான். நீங்க எது சொன்னாலும் கேட்பான். அவன் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ண உதவி பண்ணினா போதும். உங்களை தனியா வந்து பார்க்கவேண்டும் என்றுதான் வந்தேன் என்றார். ஒருபுறம் மகிழ்சியும் மறுபுறம் வியப்பாகவும் இருந்தது.

நாராயணன் அவ்வாறே பொது தேர்வில் அந்த ஆண்டு அதிக மதிப்பெண் எடுத்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். விடுமுறை நாட்களில் தவறாமல் என்னை வந்து சந்திப்பதுண்டு. அப்படியொரு ஆசிரியர் தினநாளில் என்னை சந்தித்து வாழ்த்து கூற வந்திருந்தார். அப்பொழுது பனிரெண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். அம்மாணவருக்கு அறிவுரை கூற வேண்டிய நிலை. அம்மாணவர் தான் செய்த தவறுக்கு விளக்கம் அளிக்கவிரும்பி “இல்லை சார்…” என்று தொடங்கியதுதான் தாமதம் அந்நிகழ்வை கவனித்த நாராயணன்“என்ன நீ சாருகிட்ட பதிலுக்கு பதில் பேசுற சார் சொல்றதை கண்மூடித்தனமாக கேட்கனும் அப்போதான் முன்னேறமுடியும் blind obedience இருக்கணும்” என்றாரே பார்க்கலாம்.

அந்த மாணவர் என்னிடம் உடனடியாக“sorry sir” என்றார். அன்று முதல் பள்ளி தொடங்கும் முதல் நாள் அன்று எனது முதல் உரையாக மாணவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் இந்த blind obedience பற்றிதான். LKG மாணவனைப் பாருங்கள் மிஸ் சொல்வதை கண்மூடித் தனமாக நம்புவான் கேட்பான், பேசுவான்… என்று தொடங்குவது வழக்கம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..