எழுதி முடித்த கவிதைகளின்
முதல் இரசிகனாய்
என் பேனா

கசங்கியிருந்த காகிதம்
பட்டமாகியது
கவிதை நூல் வெளியீட்டு விழாவில்

காணாமல் போன குழந்தை
கிடைத்து விடுகிறது
சுவரொட்டிகளில்

தெருகூடி சண்டை
கண்ணீர் விடும்
ஆடிகுழாய்

எடுபடவில்லை
அவளுக்கான கவிதையில்
கவிஞனாய் நானும் எவரும்

முதிர் கன்னிக்கு
வேண்டிய வரம் கிடைத்தது
பூசாரியிடமிருந்து குங்குமம்

சாலையை கடக்கும் ஆடுகள்
நின்று போகிறது
மேய்ப்பவனின் இதயம்

சின்னத்திரையில்
ஓரு பெரிய ஈடைவேளை
விளம்பரம்

பயமில்லாமல் சுத்தும்
நடு இரவில்
சுவர் கடிகாரம்

அவள் தூக்கி எறிந்த பூவால்
சக்காளத்தியாகும்
என் கவிதைப் புத்தகம்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.