கவிதை

கவிதை துளிகள்

எழுதி முடித்த கவிதைகளின் முதல் இரசிகனாய் என் பேனா கசங்கியிருந்த காகிதம் பட்டமாகியது கவிதை நூல் வெளியீட்டு விழாவில் காணாமல் போன குழந்தை கிடைத்து விடுகிறது சுவரொட்டிகளில்

கதை

இனப் படுகொலை

சின்னாவுக்கு மூளை நரம்புகளுக்குள் ரத்தம் கசிந்து தலை வெடித்துவிடும் போல் இருந்தது,

துடிக்கிறதா இல்லை நடிக்கிறதா என்று சந்தேகம் எழும் படி அவன் இதயம் கொஞ்சம் நின்று நின்று துடித்தது. பாவம் அந்த சின்ன இதயம் அதுவும் எத்தனை துன்பங்களைத்தான் தாங்கும்.

 » Read more about: இனப் படுகொலை  »

By இரா.அ, ago
கதை

காத்திருத்தல்

மழை நேரத்தில்தான் இந்த மரங்களையும் செடிகளையும் பார்க்க முடியும் என்று தோன்றியது. வெறும் பார்வையிடல் இல்லை. ரசித்து உட்கார்ந்து கொள்ளும் அந்தச் சின்னக்குட்டியை வேறு எப்போது அழைத்து வந்தாலும் இப்படி ஒரு சந்தோஷம் இருக்காது. இப்போது தூறல் கூட இல்லை. சின்னக்குட்டி கையில் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு வேகமாகச் சுற்றிக் கொண்டே வந்தாள். குச்சியைச் சுற்றிக் கொண்டு வரும்போதும் பாட்டு. எந்த விஷயமானாலும் பாட்டு மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும். மீன் பிடிக்கலாமா? என்று கேட்டாள். ஊஞ்சல் ஆடினாள். மறுபடியும் வாட்ச்மேனின் குரல் கேட்டது. முகம் சுளித்துச் சிணுங்கிக் கொண்டே “வாங்கப்பா போகலாம்” என்றாள்.

புதுக் கவிதை

புதுமைப் பெண்ணிவளா?

அலாரம் அடிக்கு முன்னே
அயராதக் கண்களுடன்
ஆதவன் அவளழகு முகத்தில்
விழித்தே சிரிப்பான் !

தட்டி எழுப்பிய செல்வங்களை
தாமதமாகாமல் பள்ளிக்கு அனுப்பித்
தாரமாகி,

 » Read more about: புதுமைப் பெண்ணிவளா?  »

கதை

கடமை

காட்டிக் கொடுத்தால் இனத் துரோகி! காட்டிக் கொடுக்காவிட்டால் எஜமானத் துரோகி. இதில் எது தருமம் எது அதருமம்? என்று நீதான் சொல்லேன்!

By Admin, ago
கதை

தனிக்குடித்தனம்

தனிக்குடித்தனம் கதை எண் 2பிரசவம் முடிந்து ஒரு மாதம் கழித்து இப்போதுதான் மனைவியையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். குழந்தை பிறந்தபோது பார்த்தது. ஒரு மாதம் பார்க்காமல் இருந்ததே மிகக் கொடுமையாகத்தான் இருந்தது. அந்த பிஞ்சு விரல்கள்,

 » Read more about: தனிக்குடித்தனம்  »

கதை

ஃபேஸ்புக் பொண்ணு!

குமாருக்கு எல்லாமே ஃபேஸ்புக்தான். வீட்டில், அலுவலகத்தில், பஸ்ஸில்,டிரைனில்,பாத்ரூமில் என எந்நேரமும் ஃபேஸ்புக்கிலேயே வாழ்ந்தான். ஃபேஸ்புக்கிலேயே சுடுகாடிருந்தால் அவன் செத்தபிறகு அங்கேயே புதைத்துவிடலாம் என்கிற அளவுக்கு ஃபேஸ்புக்கையும் அவனையும் பிரிக்க முடியாது!

அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து படிய தலைவாரி,

 » Read more about: ஃபேஸ்புக் பொண்ணு!  »

கதை

காமக் குரங்கு

"இவள் தங்கமானவள்? வேடிக்கைக்காரி இரவு முழுவதும் என்னிடம் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தாள். வெளியே போய் இவருடைய யோக்யதையைச் சொல்லிவிட்டால், மானம் போகுமே என்பதற்காக, நான் கடிதம் கொடுத்தனுப்பினேன்" என்று மதுரவல்லி கூறினாள். மறுபடியும் மிராசுதாரர் மிட்டாதாரரை முறைத்துப் பார்த்தார். "உன்னுடைய மானத்தைக் காப்பாற்றத்தானே என் மகள் முயன்றாள், இதற்கு அவள் மீது கோபிக்கிறாயே முட்டாள்" என்று பார்வை பேசிற்று.

கவிதை

பாசக்கடல்

துன்பக் கடலினிலே - நான் துயர்படும் வேளையிலே! இன்பமென வருவாள் - என் எண்ணத்திலே நிறைவாள்! பாலில் சுவைசேர்த்தே - என்னைப் பாரடா கண்ணாவென்பாள்! நூலில் இழைபோல - அவள் நுண்ணிய அறிவுடையாள்!

கட்டுரை

கற்பு

இராமாயணத்தில் 60,000 மனைவியருடன் வாழ்ந்த தயரதனிடம் யாரவது உன் கற்பென்ன என்று வினவினரா? இல்லை தன் அரசனுக்காக போரிட்டு பெண்ணை வென்றுகொண்டுவந்த பீஷ்மரிடம் கேட்டார்களா? ,இன்னொருவருக்காக நீ எப்படி சுயம்வரத்திற்கு செல்லலாம் என்று? ஏனென்றால் திணிக்க பட்ட எதையும் இங்கே பெண்கள் பொறுத்து கொள்ளவேண்டும். நிழலை கூட பெண்கள் பார்ப்பது தவறென்ற காலம் மாறி சுயம்வரம் மூலம் மனதுக்குகந்தவனை பெண்கள் தேர்ந்தெடுக்க கூடிய நிலை வந்தது ஒருவகையில் சிறிய முன்னேற்றம் என்று கொள்ளலாம்.