நான் உலகத்தைப்பற்றி பேசுவதும்
உலகம் என்னைப்பற்றி விமர்சிப்பதும்
ஆளுமை செலுத்தும் மனசாட்சியின்
அழுத்தமும், ஆரோக்கியமும்,
அழுக்குப் பொதிகளை அகற்றம்படி
மனசாட்சி ஆணையிடும்போது
அடங்கிப் போவது
மனித தர்மத்தின் உச்சமே!
பகுத்தறிவுவாத பெருமைக்கும்
பலமுள்ள சமூக சிந்தனைக்கும்
முகவரிதரும் மனசாட்சியின் குரல்
தனிமனிதனை, தனித்துவ பெருமையிலே
தரணி முன் நிறுத்துகிறது உத்தமனாக!
மனசாட்சியை இழப்பதும்
இல்லாமல் செய்வதும்
மானிலத்தை அவமதிப்பதாகும்…
மனித புலத்திற்குள், வனவிலங்குகள்
வாசம் செய்வதாக!
மனசாட்சியைக் கொன்று
வாழ்தலென்பது,
காலமுனை சிரச்சேதம் செய்யும்
தருணமாகிவிடும்!
மனிதனுக்கும், மனசாட்சிக்கும்
இடைவெளியிருப்பின்
செங்கோல்கள் செயலிழந்துவிடும்..
பங்கப்படும் மூச்சுக்களில்
‘பங்கசு’க் கிருமிகள் பெருகும்!!!
மரபுக் கவிதை
உழைப்பாளர்களை உயர்த்துவோம்
I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்
உழைப்பாளர்களை உயர்த்துவோம்
உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!