சமூக தளம் …

“எனக்கு அதுதான் காதல்ன்னு தோணிச்சு. அதுதான் இதுகெல்லாம் காரணமா மாறிடிச்சுன்னு நெனைக்கிறேன். எல்லார்கிட்டேயும் மன்னிப்புக் கேட்டேன். எல்லாரும் அவங்க மட்டும் நல்லவங்க போலேயும் நான் மட்டும் கெட்டவள் போலேயும் என்னை ரொம்ப உதாசினப் படுத்திட்டாங்க. எதோ தீராத நோய் வந்தது போலப் பார்க்கிறாங்க. நீ மட்டும்தான் குமுதா, எதுக்குடீ எங்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்கிற?. அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்னு கேட்டே. கொஞ்சம் ஆறுதலா இருக்கு. ஒரு நாள் என் வீட்டிற்கு வற்றியா?”

ஓர் ஊமையின் பாடல்!

செயற்கையாகிப் போன
புன்னகையைக் கண்டு
தாழ்வு உணர்ச்சிகள்
நீளுகின்றன!

விரக்தியின்
உச்சப் படியில்
நின்று கதறி
சோகமாய் முகாரி
இசைக்கிறது
என் இயலாமை!

கவிதைகளுடனான கைகுலுக்கல் – ஒரு பார்வை

இது பயனளிக்கும் ஓர் ஆவணம் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களின் ”கவிதைகளுடனான கைகுலுக்கள் – ஒரு பார்வை” என்ற இந்த நூல் வித்தியாசமானதும் வருங்காலத்தில் ஆய்வாளர்களுக்கு பயனளிக்கக் கூடிய ஓர் ஆவண நூலாகவும் திகழும் என்பதிலும் ஐயமில்லை. இதற்குக் காரணங்கள் பல: 01. நூலாசிரியையின் பரந்த மனப்பான்மையின் வெளிப்பாடாகப் புதிய எழுத்தாளர்கள் தொடர்பான தமது தெரிவுகளையும், Read more

இரட்டை மலர்

மொட்டிரண்டுப் பூத்திருக்கு முறுவலையே காட்டிருக்கு, கட்டிவெல்லக் கன்னமதில் கனிமுத்தம் நாட்டிருக்கு. சின்னஞ்சிறு பூக்களிங்கே சித்திரமாய்ச் சிரித்திருக்கு, வண்ணமலர்க் கோலமிட்டு வானமதைப் பறித்திருக்கு. பட்டுப்போன்ற மென்மையிலே பளபளப்பாய்ப் பார்த்திருக்கு, சிட்டுக்களின் புன்னகையில் செகங்கூட வேர்த்திருக்கு. அலங்காரப் பொம்மையிலே ஆனந்தச் சிலிர்ப்பிருக்கு, கலங்காத மனதையுமே கரைத்துவிடும் சிறப்பிருக்கு. இரட்டையாய் இருமலர்கள் இரம்மியமாய் மலர்ந்திருக்கு, திரட்டிவந்து இன்பமதைத் தித்திப்பாய்த் தந்திருக்கு.

காற்றாடியின் இலட்சியப் பயணம் …

உள்ளத்தில் உரத்தை ஏற்றியது
உறுதி கொண்டு விண்ணை நோக்கியது
உற்சாகக் குருதி உடலை கிளர்ந்தது
நம்பிக்கை ஒளி கொந்துதலால்
தும்பிக்கை பலம் உந்துதலால்
எம்பி எம்பி உயர எழுந்தது
எதிர்படு இடர்களை கடந்தது
எதிர்நோக்கு உச்சியை எய்தது

மகரந்தம் தேடும் மலர்கள் & புத்தகம் சுமக்கும் பூக்கள்

தாரமங்கலம் தமிழ்ச்சங்க செயலாளராக செயலாற்றும் இவர், பல்வேறு கவியரங்குகளிலும் பங்கெடுத்து,
தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறார்.

இவரது புத்தகம் சுமக்கும் பூக்கள் மற்றும் மகரந்தம் தேடும் மலர்கள் இரண்டு கவிதைத் தொகுப்பினையும்
ஊருணி வாசகர் வட்டம் பதிப்பித்திருக்கிறது.

தமிழர் திருநாள் திராவிடர் திருநாளல்ல‌

தமிழருக்கே இரண்டகத்தை செய்யும் பேதை
திசையெட்டில் வாழ்வதற்கு விடவே வேண்டாம்
தமிழ்மானம் இல்லாதான் வாழு தற்கு
தகுதியில்லான் என்பதினை எண்ண வேண்டும்

தமிழ்மானம் இல்லாதார் தமிழ கத்தில்
திராவிடத்து நச்சுதனை நுழைய விட்டு
தமிழ்மண்ணை மாசாக்கும் செய்கை தன்னை
தணலெனவே நிமிர்ந்திங்கே எதிர்க்க வேண்டும்

பொங்கலோ பொங்கல் ..!

ஏர் தந்த சீதனத்தை
பார் கண்ட எளியவர்க்கு
கார் கொண்ட உள்ளத்தால்
சீர் கொண்டு பகிர்ந்தளித்து

பொங்கிடும் அவர் புன்னகையில்
புதுப் பொங்கல் சமைத்திடுவோம் !!!

சொல்வாய் நீயே!

மாக்கோலம் போடுகின்ற மங்கையே – உன் மனக்கோலம் என்னாயிற்று சொல்வாயே! கலர்க்கோலம் போடுகின்ற காரிகையே – உன் கனவுக்கோலம் என்னாயிற்று சொல்நீயே! அதிகாலைத் துயிலெழுந்த அழகியே – உன் அடிமனதில் உறங்குபவர் யாரோ? பதுமையாய் முகங்காட்டும் பாவையே – உன் பவளவிதழில் பந்திவைப்பவர் எவரோ? மல்லிகையைச் சூடியிருக்கும் மாதவியே – உன் மாமனவனை நினைக்கையிலே புன்சிரிப்போ? Read more

சமத்துவப் பொங்கல் பொங்கிடுவோம்

கழிக்கின்றோம் பழையவற்றைக்
காணவாரீர் எனவழைத்தே
விழியெரிய நேயத்தை
விளையன்பை எரியவைத்தே
கழிவென்றே மனிதத்தைக்
கருகவைத்துக் கணியன்தன்
வழியடைத்துக் கொளுத்துகின்ற
வன்முறையா போகியிங்கே !