உழைப்பாளர் தினம்

சிலையாகிப் போனபின்னும் சித்திரமாய் இருந்திடாமல் உழைக்கின்ற மானிடரே ! உலகத்தின் ஆணிவேரே ! களைப்படையா உழைப்பாலே காலமுழுதும் நிலைப்போரே ! பிழைப்பதற்கு இவ்வழிபோல் பிறிதொன்று இல்லையே ! உச்சிவேளை தகித்தாலும் உணர்த்தும்பசி போக்கிடவே கச்சிதமாய் பணிமுடிக்கும் கல்மனதுக் காரர்களே ! மெச்சிடவே பலருமிங்கே மெய்வார்த்தைக் கூறிடுவர் , தச்சுத்தொழில் செய்தாலும் தவறில்லைத் தரணியிலே , காகிதமே பொறுக்கினாலும் கட்டாயம் அதுதொழிலே , ஆயுதங்கள் செய்தாலும் அத்தனையும் தொழில்தான் , தாகமெனத் Read more

உழைப்பாளர் தினம்

சிலையாகிப் போனபின்னும் சித்திரமாய் இருந்திடாமல் உழைக்கின்ற மானிடரே ! உலகத்தின் ஆணிவேரே ! களைப்படையா உழைப்பாலே காலமுழுதும் நிலைப்போரே ! பிழைப்பதற்கு இவ்வழிபோல் பிறிதொன்று இல்லையே ! உச்சிவேளை தகித்தாலும் உணர்த்தும்பசி போக்கிடவே கச்சிதமாய் பணிமுடிக்கும் கல்மனதுக் காரர்களே ! மெச்சிடவே பலருமிங்கே மெய்வார்த்தைக் கூறிடுவர் , தச்சுத்தொழில் செய்தாலும் தவறில்லைத் தரணியிலே , காகிதமே பொறுக்கினாலும் கட்டாயம் அதுதொழிலே , ஆயுதங்கள் செய்தாலும் அத்தனையும் தொழில்தான் , தாகமெனத் Read more

இயற்கை அழகு!

முத்துக்களைக் கோர்த்துவந்து முறுவலிக்கும் பற்களென்றாய், கெழுத்திமீனை எடுத்துவந்து கண்களெனக் காட்டுகின்றாய். முந்திரிப்பழம் கொண்டுவந்து மூக்கென்றே வாசிக்கிறாய், கோவைப்பழம் எடுத்துவந்து கூறுகிறாய் இதழென்று. கருமுகிலைத் தாங்கிவந்து கருங்கூந்தல் தானென்றாய், சங்கினையே தருவித்துச் சங்கீதக் கழுத்தென்றாய். செரியினையே பதித்துவிட்டு செந்தூரக் கன்னமென்றாய், மல்கோவா மறுதலிக்க மாம்பழமே முகமென்றாய். மட்டைப்பந்து மைதானம் மங்கையுந்தன் நெற்றியென்றாய், மன்மதனின் வில்லாக மணக்குமிந்த இமையுமென்றாய்.

பாதமே வேதம்

உந்தன் பாதம் எந்தன் வேதம், உந்தன் கொலுசு எந்தன் இன்னிசை. ஆடும் கால்கள் ஆனந்த ஊற்று, ஓடும் பரல்கள் உயிரின் ஓசை, வண்ணப் பூச்சு வடிவின் வீச்சு, மின்னிடும் மெட்டி மனதின் பேச்சு, வெள்ளிக் கொலுசு அள்ளுது மனசை, துள்ளும் அதனின் துடிக்கும் ஓசை, வெல்லும் இசையிடம் வெஞ்சமர் புரியும். பாதம் மட்டுமே பார்க்கப் போதும், குளிர்ந்த பாதம் கோபுர அடித்தளம், மிளிறும் விரல்கள் மின்மினிப் பூச்சிகள். சிவந்தத் தாள்கள் Read more

கண்மணியே நீவாழி!

மணமுடித்த மங்கையே நீவாழி! மங்கலம்நிறை தங்கையே நீவாழி! கனவுயாவும் நிறைவேறி நீமகிழ காட்சிதரும் கண்மணியே நீவாழி! புகுந்தவீடு புகழ்பெற்றல் போலுனது பிறந்தவீடு மனமகிழவும் செய்திடணும், கண்ணிறைந்த கணவனவன் செயல்களிலே கட்டாயம் உன்விருப்பம் கலந்திடணும். மாமனாரும் மாமியாரும் போற்றுகின்ற மருமகளாய் எந்நாளும் திகழ்ந்திடணும், குடும்பத்தின் பொன்விளக்காய் நீயிருந்து கோவிலாக வீட்டைநீ மாற்றிடணும். நாத்தனாரின் உறவுகளை வெறுத்திடாமல் நீஅவர்க்கு உதவியாக இருந்திடணும், பெற்றவர்கள் உனதன்பில் மனமகிழ்ந்து பேரின்பம் கண்டவரும் உணர்ந்திடணும். புன்முறுவல் பூக்கின்ற Read more

பள்ளி பயிற்றுவித்த பாடம்

பதினைந்து வயதினிலே         பலகனவு எனக்குண்டு, உதிரமது ஊறுகின்ற         உன்னதத்தின் காலமது, எதுவுமில்லை உண்பதற்கு         எப்படியூறும் உதிரம்தான், விதியென்றே பள்ளியிலே         விளையாட மனமுமில்லை. கட்டணத்தில் படிக்கின்ற         காலமொன்று இருந்ததாலே எட்டாவது மாதத்திலே         எனக்குக்கட்ட பணமுமில்லை, சட்டப்படி பள்ளியிலே Read more

மாத்திரையின் பிடியில் மன்பதை

மரத்தால் உயிர்வாழும் காலமாறி         மாத்திரையால் வாழுகிற காலமாச்சே. உரத்தால் விளைகின்ற பயிர்மாறி         உருக்குலைந்த வயலாக உருவாச்சே. உணவையே மருந்தாக உண்கையிலே         உடலாயுள் கூடியது உண்மைதான், உணவுக்குப் பதிலாக உயிரழிக்க         உருவாக்கும் மருந்திங்கு வந்தாச்சே. மன்பதையின் ஆயுளிங்குக் கூடக்கூட         மருந்துகளின் எண்ணிக்கைக் கூடுதலாம், Read more

எண்ணெய் இல்லாத் தலையிலும் ஈர்ப்பு

எண்ணெய்யிலா தலையெனினும் ஈர்ப்பு இருக்குது; நல்ல இளமை சிரிக்குது; கண்கள் பார்க்கத் துடிக்குது; முகமோ பழக அழைக்குது; இதழ்கள் பருக விரும்புது. வறண்டுபோன முடியெனினும் வனப்பைக் காட்டுது; புது வசந்தம் கூட்டுது; எழில் வடிவம் பேசுது; விழிகள் காணக் கூசுது; மயக்கம் கண்ணில் தெரியுது. கறுப்புநிற முகமெனினும் கவிதைப் பாடுது; இளமை கருத்தில் ஆடுது; கவர்ச்சி சிந்தைக் கலக்குது; அழகு சிரசில் நிலைக்குது; கன்னம் கவர்ந்து இழுக்குது. அலங்காரம் இல்லையெனினும் Read more

அன்பின் அகலிகை

தலைவிரி கோலம் கையில் செல்போன் நவீன கண்ணகி. அழுகைக்குப் பதில் ஆனந்த சிரிப்பு புதுமை மாதவி. கவர்கின்ற உடையில் கச்சித உடம்பு காண்கின்ற ரதி. சாலையின் ஓரத்தில் சஞ்சலத்தில் பெண் பேசா சாவித்திரி. கணவனைத் தேடி காட்டுக்கு வந்த பொன்மகள் தமயந்தி. துஷ்யந்தனை மனதில் துயரமாய் எண்ணும் தூய்மைநிறை சகுந்தலை. தீயினுள் புகுந்து கற்பினை விளக்கும் காவிய சீதை. திறந்த கண்களால் திருமுகம் காட்டும் கைபேசி காந்தாரி. ராமனை எண்ணி Read more

திருமதிகள் போற்றுகின்ற திருமகளே வாழியவே!

தங்கமகளாய் பிறந்தெமக்கு         தரணியினைப் புரியவைத்தாய், சிங்கமென நடைபோட         செகமதிலே பிறப்பெடுத்தாய், சங்கத்தமிழ் பயிலபாட         சாலையினைத் தேர்ந்தெடுத்தாய், வங்கக்கடல் அலைபோல         வார்த்தையிலே வளம்சேர்த்தாய். உயர்கல்வி பயில்வதற்கு         ஊர்விட்டு புறமிருந்தாய், பயமின்றி ஏழாண்டு         படிப்பறிவில் சிறந்திருந்தாய், அயர்வின்றி கடுமுழைப்பில் Read more