மணமுடித்த மங்கையே நீவாழி!
மங்கலம்நிறை தங்கையே நீவாழி!
கனவுயாவும் நிறைவேறி நீமகிழ
காட்சிதரும் கண்மணியே நீவாழி!

புகுந்தவீடு புகழ்பெற்றல் போலுனது
பிறந்தவீடு மனமகிழவும் செய்திடணும்,
கண்ணிறைந்த கணவனவன் செயல்களிலே
கட்டாயம் உன்விருப்பம் கலந்திடணும்.

மாமனாரும் மாமியாரும் போற்றுகின்ற
மருமகளாய் எந்நாளும் திகழ்ந்திடணும்,
குடும்பத்தின் பொன்விளக்காய் நீயிருந்து
கோவிலாக வீட்டைநீ மாற்றிடணும்.

நாத்தனாரின் உறவுகளை வெறுத்திடாமல்
நீஅவர்க்கு உதவியாக இருந்திடணும்,
பெற்றவர்கள் உனதன்பில் மனமகிழ்ந்து
பேரின்பம் கண்டவரும் உணர்ந்திடணும்.

புன்முறுவல் பூக்கின்ற பொன்முகத்தில்
புத்தம்புதுப் பிரகாசம் பொழிந்திடணும்,
கண்மையோ கண்ணீரில் கரைந்திடாமல்
கவலைதனை மறைத்தின்பம் வழிந்திடணும்.

பொறுப்புள்ள தலைவியாக நீபெற்ற
புதல்வர்களை நன்முறையில் வளர்த்திடணும்,
வெறுப்புதனை எவர்மீதும் காட்டிடாமல்
விருப்பமுடன் குடும்பத்தை நடத்திடணும்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »