தலைவிரி கோலம்
கையில் செல்போன்
நவீன கண்ணகி.
அழுகைக்குப் பதில்
ஆனந்த சிரிப்பு
புதுமை மாதவி.
கவர்கின்ற உடையில்
கச்சித உடம்பு
காண்கின்ற ரதி.
சாலையின் ஓரத்தில்
சஞ்சலத்தில் பெண்
பேசா சாவித்திரி.
கணவனைத் தேடி
காட்டுக்கு வந்த
பொன்மகள் தமயந்தி.
துஷ்யந்தனை மனதில்
துயரமாய் எண்ணும்
தூய்மைநிறை சகுந்தலை.
தீயினுள் புகுந்து
கற்பினை விளக்கும்
காவிய சீதை.
திறந்த கண்களால்
திருமுகம் காட்டும்
கைபேசி காந்தாரி.
ராமனை எண்ணி
சாபம் நீங்கிட
அன்பின் அகலிகை.