முத்துக்களைக் கோர்த்துவந்து
முறுவலிக்கும் பற்களென்றாய்,
கெழுத்திமீனை எடுத்துவந்து
கண்களெனக் காட்டுகின்றாய்.
முந்திரிப்பழம் கொண்டுவந்து
மூக்கென்றே வாசிக்கிறாய்,
கோவைப்பழம் எடுத்துவந்து
கூறுகிறாய் இதழென்று.
கருமுகிலைத் தாங்கிவந்து
கருங்கூந்தல் தானென்றாய்,
சங்கினையே தருவித்துச்
சங்கீதக் கழுத்தென்றாய்.
செரியினையே பதித்துவிட்டு
செந்தூரக் கன்னமென்றாய்,
மல்கோவா மறுதலிக்க
மாம்பழமே முகமென்றாய்.
மட்டைப்பந்து மைதானம்
மங்கையுந்தன் நெற்றியென்றாய்,
மன்மதனின் வில்லாக
மணக்குமிந்த இமையுமென்றாய்.