புரிதல்களின்மையின்
ஏக்கத்தோடு
மருண்டு போகிறது
என் இதயப் பறவை …
tamilnenjam
கணத்துக்குக் கணம்
பணம் பார்த்து
குணம் மாறும்
மானிடர் கண்டு
சுருக்கிக் கொள்கிறது
அது தன் சிறகை!

வேகமாக
மிக வேகமாக
கடந்து செல்லும்
மனிதர்களின்
முகம் பார்த்து
துயரங்கள்
மீழ் சுழற்சியாகின்றேன் …

செயற்கையாகிப் போன
புன்னகையைக் கண்டு
தாழ்வு உணர்ச்சிகள்
நீளுகின்றன!

விரக்தியின்
உச்சப் படியில்
நின்று கதறி
சோகமாய் முகாரி
இசைக்கிறது
என் இயலாமை!

இறுதியாய்
வெட்கத்தோடும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

அறிமுகம்

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

 » Read more about: வாழ்வி(ய)ல் வசந்தம்!  »

மரபுக் கவிதை

யாசக வாசலிலே…

இமைகள் வருடிய தாயும் எங்கே
இதயம் தொட்ட உறவுகள் எங்கே
இரக்கம் படைத்த நெஞ்சமும் எங்கே
இளமை வளமை இன்பம் எங்கே..எங்கே…?

தோளில் சுமந்த செல்வங்கள் எங்கே
தேடியச் செல்வங்கள் போனதும் எங்கே
ஓடி யாடி உழைத்த….தெல்லாம்
தேடியும் பார்த்தேன் தெரியவில்லை.

 » Read more about: யாசக வாசலிலே…  »

புதுக் கவிதை

காடுகள்

காடுகள் – நம்
வாழ்விடத்தின் கடைகால்கள்
ஆனால்… நாம்
தகர்த்துக் கொண்டிருக்கிறோம்.

காடுகள் – நம்
உயிர்வளி சேமிப்பகங்கள்
ஆனால்… நாம்
செலவழித்து கொண்டிருக்கிறோம்.

 » Read more about: காடுகள்  »