அறிமுகம்

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

 » Read more about: வாழ்வி(ய)ல் வசந்தம்!  »

நேர்காணல்

நிலாபெண்- திருமதி லறீனா அப்துல் ஹக்

சிங்கள - தமிழ், தமிழ் - சிங்கள மொழிபெயர்ப்புக்களைப் பொறுத்தவரையில் அவை இன்னுமின்னும் அதிகரிக்கப்படவும் செம்மைப்படுத்தப்படவும் பரவலாக்கப்படவும் வேண்டும். இதுவரையும் வந்துள்ள இலக்கிய மொழிபெயர்ப்புகளில் அனேகமானவை போர் மற்றும் போருக்குப் பின்னான நிலைமைகளை வெளிக்கொணரும் வகையிலேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. போரின் அவலங்கள் குறித்துச் சிங்கள மக்களும் அறிய வேண்டும் என்ற முனைப்பு தமிழ் எழுத்தாளர்களிடமும், தமிழ் எழுத்தாளர்களின் துயரங்களை நாமும் விளங்கித்தான் உள்ளோம் என்ற உணர்வுத் தோழமையை வெளிப்படுத்தும் உந்துதல் சிங்கள எழுத்தாளரிடையேயும் இருப்பது வரவேற்கத்தக்கதுதான். அதில் ஐயமில்லை.

கவிதை

ஓர் ஊமையின் பாடல்!

செயற்கையாகிப் போன புன்னகையைக் கண்டு தாழ்வு உணர்ச்சிகள் நீளுகின்றன! விரக்தியின் உச்சப் படியில் நின்று கதறி சோகமாய் முகாரி இசைக்கிறது என் இயலாமை!