உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

காயப்பட்ட என் நெஞ்சம்
வேதனை தாங்காமல்
விம்மித் துடிக்கும்!

நித்திரை வராத
நிலவுப் பொழுதுகளில்
கண்கள் மட்டும்
கண்ணீர் வடிக்கும்!

செத்துப் போன என் வாழ்வு
சில சொப்பனங்களால் மாத்திரம்
தினம் நகரும்!

யோசித்து வலிக்கும்
என் உணர்வுகள் – எப்போது
நிம்மதியை உணரும்?

கடந்து போன காலங்கள்
உயிரை உடைத்து
வலிகள் தரும்!
ஆனபோதும் நிச்சயமாய்
ஒருநாள் எனக்கு
வசந்தம் வரும்!!!

தமிழ்நெஞ்சம் - ஜூன் 2020
பூங்காவனம் 37 தரவிறக்கம் ( download) செய்ய இங்கே கிளிக் செய்யவும்;

1 Comment

நிறைமதி நீலமேகம், பெண்ணாடம் · மே 31, 2020 at 8 h 18 min

சிறப்பு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்