புதுக் கவிதை

காடுகள்

காடுகள் – நம்
வாழ்விடத்தின் கடைகால்கள்
ஆனால்… நாம்
தகர்த்துக் கொண்டிருக்கிறோம்.

காடுகள் – நம்
உயிர்வளி சேமிப்பகங்கள்
ஆனால்… நாம்
செலவழித்து கொண்டிருக்கிறோம்.

 » Read more about: காடுகள்  »

பகிர்தல்

தமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம்

தமிழைப் போல
நலமுடன் வளமுடன்
வாழ்க! வாழ்க!!

இலக்கு நோக்கி இயங்கு கின்ற
இனிய தோழர்
தமிழ்நெஞ்சம்- எதையும்
துலக்க மாக துணிந்தே செய்யும்
தூய நேயர்
தமிழ்நெஞ்சம்

அன்பில் பண்பில் ஆற்றல் தன்னில்
அகம்போல் சிறந்தவர்
தமிழ்நெஞ்சம்- தோழர்
இன்று போல இன்பமாக
இயற்றமிழ் ஆவார்
தமிழ்நெஞ்சம்

நல்மனம் கொண்ட நற்றமிழ் வாணர்
நாடு போற்றும்
தமிழ்நெஞ்சம்–

 » Read more about: தமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம்  »

மரபுக் கவிதை

மண்ணும் மொழியினம் மாற்றான் கையில்

மண்ணும் மொழியினம் மாற்றான் கையில்
இன்னும் என்னடா இமைக்குள் உறக்கம்?

எழுந்து வாடா எரிதழல் போல
பழுதை எல்லாம் பட்டென எரித்திடு!

ஆண்ட இனமே அடிமை வாழ்வா?

 » Read more about: மண்ணும் மொழியினம் மாற்றான் கையில்  »

கவிதை

தமிழர் திருநாள் திராவிடர் திருநாளல்ல‌

தமிழருக்கே இரண்டகத்தை செய்யும் பேதை திசையெட்டில் வாழ்வதற்கு விடவே வேண்டாம் தமிழ்மானம் இல்லாதான் வாழு தற்கு தகுதியில்லான் என்பதினை எண்ண வேண்டும் தமிழ்மானம் இல்லாதார் தமிழ கத்தில் திராவிடத்து நச்சுதனை நுழைய விட்டு தமிழ்மண்ணை மாசாக்கும் செய்கை தன்னை தணலெனவே நிமிர்ந்திங்கே எதிர்க்க வேண்டும்