201601151215.jpgதமிழருக்கு திருநாளாய் பொங்கல் என்று
தமிழ்நிலத்தில் உழுதவர்கள் சொல்லும் போது
தமிழருக்குக் கேடுசெய்யும் திரா விடத்தான்
திராவிடர் திருநாளாக சொல்லு கின்றார்

இமியாவும் அறிவின்றி இயக்கம் செய்யும்
இருள்மனத்து சோரமணி செய்கை கண்டும்
உமிபோல காத்தவனை முளைக்க செய்யும்
உதவாத கறைநீக்க முயல வேண்டும்

தமிழனல்லா திராவிடத்தான் பொங்கல் தன்னை
திராவிட  திருநாளாக சொல்லும் போது
தமிழனாக இருப்போர்கள் தடுக்க வேண்டும்
தம்பதவி காத்திடவே அமைதி காத்து
201601151215.jpg
தமிழருக்கே இரண்டகத்தை செய்யும் பேதை
திசையெட்டில் வாழ்வதற்கு விடவே  வேண்டாம்
தமிழ்மானம் இல்லாதான் வாழு தற்கு
தகுதியில்லான் என்பதினை எண்ண வேண்டும்

தமிழ்மானம் இல்லாதார் தமிழ கத்தில்
திராவிடத்து நச்சுதனை நுழைய விட்டு
தமிழ்மண்ணை மாசாக்கும் செய்கை தன்னை
தணலெனவே நிமிர்ந்திங்கே எதிர்க்க வேண்டும்

தமிழனல்லா திராவிடத்தான் தமிழி னத்து
தலைவரென்று சொல்லுகின்றான் தடுக்க வேண்டும்
தமிழின்றி திராவிடத் தலைவரென்றே தான்
தமிழகத்தில் சொல்லுதற்கு தயங்கு கின்றான்

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.