மொட்டிரண்டுப் பூத்திருக்கு
முறுவலையே காட்டிருக்கு,
கட்டிவெல்லக் கன்னமதில்
கனிமுத்தம் நாட்டிருக்கு.

சின்னஞ்சிறு பூக்களிங்கே
சித்திரமாய்ச் சிரித்திருக்கு,
வண்ணமலர்க் கோலமிட்டு
வானமதைப் பறித்திருக்கு.

பட்டுப்போன்ற மென்மையிலே
பளபளப்பாய்ப் பார்த்திருக்கு,
சிட்டுக்களின் புன்னகையில்
செகங்கூட வேர்த்திருக்கு.

அலங்காரப் பொம்மையிலே
ஆனந்தச் சிலிர்ப்பிருக்கு,
கலங்காத மனதையுமே
கரைத்துவிடும் சிறப்பிருக்கு.

இரட்டையாய் இருமலர்கள்
இரம்மியமாய் மலர்ந்திருக்கு,
திரட்டிவந்து இன்பமதைத்
தித்திப்பாய்த் தந்திருக்கு.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்