பொங்கலோ பொங்கல்

தை திங்கள் முதல் நாளாம்
தமிழர்க்கெலாம் திரு நாளாம்
ஏர் முனையில் வாழ்பவர்க்கு
பேர் புகட்டும் பெரு நாளாம் !

சிற்றெரும்பு வட்டமிட
முற்றமதில் மாக் கோலமிட்டு
வற்றாத வாழ்வு பெற
பற்றுக் கொண்ட பாமரரும்
சுற்றங்களும் சூழ்ந்து நின்று

செங்கதிரோன் முகம் பார்த்து
செங்கரும்பு புறம் நட்டு
சேய் தழுவும் மார்பினைப் போல்
அதை தழுவி மஞ்சள் இட்டு
மா இலைத் தோரணங்கள்
மங்கலமாய் வாசல் கட்டி

வண்ணக் கோலம் நடுவினிலே
வகையாக அடுப்பு மூட்டி
வளைக் கரங்கள் கை கூட்டி
புத்தரிசி பானையிட்டு
பொங்கிவர பொங்கலிட்டு
பொங்கலோ பொங்கல் என
பூரிப்பில் கொளை இட்டு
தலை வாழை படையல் போட்டு

உண்டி தரும் உழவனுக்கும்
அண்டி வாழும் ஆவினுக்கும்
நன்றி சொல்லி நாம் மகிழ்ந்து

ஏர் தந்த சீதனத்தை
பார் கண்ட எளியவர்க்கு
கார் கொண்ட உள்ளத்தால்
சீர் கொண்டு பகிர்ந்தளித்து

பொங்கிடும் அவர் புன்னகையில்
புதுப் பொங்கல் சமைத்திடுவோம் !!!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.