கவிதை

நிலம்வணங்கும் பொங்கல்

மஞ்சள் கொத்தோடு மாமரத்து இலையோடு இஞ்சித் தண்டோடு எறும்பூரும் கரும்போடு வட்டப் புதுப்பானை வாயெல்லாம் பால்பொங்க பட்டுப் புதுச்சோறு பொங்கிவரும் பொங்கலிது

கவிதை

வண்டமிழை வாழ்த்திடுவோம் தோழர்களே!

உழைக்கின்ற வன்கைகள் உயர்வுகளைப் பெற்றிடவே விழைந்தெழுந்து ஒற்றுமையாய் வென்றிடுவோம் தோழர்களே! அலைபாயும் கடல்தனிலே அணையாத விளக்காவோம்! நிலையற்றோர் வாழ்ந்திடவே நெறிபடைப்போம் தோழர்களே!

கவிதை

மனிதனை நினைத்தால்

பிறர் குறைகளைச் சுட்டிக் காட்டுவதில் வேறு எந்த உயிர்களும் அவனை வென்றதாக வரலாறு கிடையாது என்பதால்! அவன் தன் பிழைகளை என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை!

கதை

மறதி

ராமுவுக்கு ஞாபகமறதி அதிகம். ஆனால் அதை அவன் ஒப்புக் கொள்ளவே மாட்டான்.

ஒருநாள் அவன் வாக்கிங் போகும்போது ஒரு போர்டைப் பார்த்தான்.

‘டாக்டர் பூதலிங்கம் – மனோதத்துவ நிபுணர்’.

 » Read more about: மறதி  »

கவிதை

பாவேந்தனே மீண்டும் வா வேந்தனே

சாதிமதப் பேய்களுக்கு எதிராய் நின்றான் சவக்குழியைத் தோண்டிஅதைப் புதைப்போ மென்றான்! பாதிவழிப் பயணத்தில் துணைஇ ழந்த பாவையர்க்கு மறுவாழ்வை அமைப்போ மென்றான்! நீதிவழிக் காதலுக்குத் தடைகள் செய்யும் நீசருக்கு எரிமலையாம் இவரின் தோற்றம்! நாதியற்ற இனம்போல தமிழர் வீழ்ந்தார் நடுவழியில் இவன்பாட்டால் எழுந்து நின்றார்!

உருவகம்

இறைவன் சிரிக்கிறான் !

‘இறைவா இது என்ன புதுமை? உலகையே கபளீகரம் செய்த என்னால் இந்த அற்பக் கோரைப் புல்லை அசைக்க முடியவில்லையே! இதன் மர்மமென்ன? எல்லாச் சக்தியிலும் பார்க்க என் பலமே மேலென்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு ஏன் இந்தத் தோல்வி? என் சக்தியில் என்ன குறைபாடு?’ என்று புயல் கேட்டு அமைதியடைந்து அடங்கிவிட்டது. எங்கும் நிசப்தம். புயலின் கோரத் தாண்டவத்தாலும் அதன் அட்டூழியத்தாலும் அழிந்து கிடந்த அண்டம் அழுதுகொண்டிருந்தது. எல்லாச் சக்திகளுக்கும் மேலான சக்தியான இறைவன், புயலின் பிரார்த்தனையில் நேத்திரங்களைத் திறந்து அண்டத்தைப் பார்த்தான். விரல் நொடிக்கும் நேரம்...

கவிதை

தமிழ்நெஞ்சம் அமின் வாழ்க!

கன்னல் கவியழகில் காதல் பெருக்கெடுத்து மின்னும் தமிழ்நெஞ்சம் இன்னமினார்! - மன்னுபுகழ் பின்னும் நிலையுறுக! பேறுகள் பெற்றோங்கி இன்னும் கலையுறுக ஈங்கு! அன்பின் பெருக்கால் அனைவரையும் ஆட்கொள்ளும் இன்பத் தமிழ்நெஞ்சம் எம்அமினார்! - நன்வாழ்கை அன்னை மொழியேந்தும்! முன்னை நெறியேந்தும்! பொன்னை அகமேந்தும் பூத்து!

கவிதை

முனைவர் தமிழண்ணல் கையறுநிலை

வல்லதமிழ் ஓங்க வரலாற்றை நன்காய்ந்து நல்லபுகழ் நுால்களை நல்கியவர்! - வெல்லுதமிழ் அண்ணல் மறைந்திட்டார்! ஐயகோ! அன்பருளக் கண்ணீர்க் கடலெனக் காண்! ஓங்கும் தமிழணிக்கே ஒப்பில் தலைமையினைத் தாங்கும் மறவர் தமிழண்ணல்! - ஈங்கெழா நீடுதுயில் கொண்டதுமேன்? ஐயோ!தன் நெஞ்சுடைந்து பாடுகுயில் தேடும் பறந்து!

கவிதை

தாய்க்கொரு மடல்

எஜமானின் வீட்டு கனவான்களுக்கு சமைத்துத்தான் கொடுக்கின்றேன் வயிற்றுப் பசியாற்றவும் உடற் பசியாற்றவும் என்னைத்தான் நாடுகின்றான் ஒருவன் மாறி ஒருவன்! செத்துப்போன உடலுக்குள்ளே ஒரு குற்றுயிராய் வாடுகின்றேன் கலங்கிவிடாதே தாயே...!

கவிதை

புகலிடம் தாராயோ?

உலவும் தென்றல் குளிரெனவே - என் உள்ளச் சோலையில் பூத்தவளே! இலவு காத்த கிளிபோல எனை ஏங்க வைத்தே சென்ற தெங்கே? பிரிவென் கின்ற புயற்கரத்தால் - உயர் பாசச் சுடரை அணைத்துவிட்டுச் சருகாய் என்றன் வாழ்வதனைத் - தரையில் சரியச் செய்தே சென்றதெங்கே?