கவிதை
நிலம்வணங்கும் பொங்கல்
மஞ்சள் கொத்தோடு மாமரத்து இலையோடு இஞ்சித் தண்டோடு எறும்பூரும் கரும்போடு வட்டப் புதுப்பானை வாயெல்லாம் பால்பொங்க பட்டுப் புதுச்சோறு பொங்கிவரும் பொங்கலிது
கட்டுரை
மதமாற்றம் எண்ணங்களின் மாற்றம்
மதத்தைப் பின்பற்றுபவர்கள் பாவம் செய்ய அஞ்சவேண்டும். அடுத்தவனை அடிமைப்படுத்துவதற்குப் பயப்படவேண்டும். அரிவாள், கோடரி, கத்தி, வெடிகுண்டு போன்றவற்றை மனிதர்கள் மேல் பயன்படுத்துவது நரகம் செல்வதற்கான வழி என்று நம்பவேண்டும். நம்பி அவற்றைச் செய்யாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் சுய விருப்பு வெறுப்புகளோடு பிறந்திருக்கிறான். தன் குடும்ப சமுதாய மற்றும் நாட்டின் பழக்க வழக்கங்களால் தன்னைச் சில நிர்பந்தங்களுக்கு உள்ளாக்கிக்கொள்கிறான். சில நிர்பந்தங்கள் அவனுக்கு மகிழ்வினைத் தருகின்றன. சில நிர்பந்தங்கள் துயரத்தைத் தருகின்றன.