ராமுவுக்கு ஞாபகமறதி அதிகம். ஆனால் அதை அவன் ஒப்புக் கொள்ளவே மாட்டான்.
ஒருநாள் அவன் வாக்கிங் போகும்போது ஒரு போர்டைப் பார்த்தான்.
‘டாக்டர் பூதலிங்கம் – மனோதத்துவ நிபுணர்’.
‘இவரை கன்ஸல்ட் செய்தால் என்ன?’ என்று நினைத்தவன்… உள்ளே நுழைந்தான்.
“வாங்க… உட்காருங்க”.
“எனக்கு ஞாபகமறதி அதிகமா இருக்கறதா எல்லாரும் சொல்றாங்க…” என்று இழுத்தான் ராமு.
“ஓ.கே.. லெட் அஸ் ஸீ… உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?” இந்த விஷயத்தில் அவனுக்கு மறதியே கிடையாது.
“ஆகிவிட்டது” என்றான்.
“உங்கள் டெலிபோன் நம்பர் ஞாபகமிருக்கிறதா…?”
டைரியை எடுத்தான் ராமு.
“நோ… நோ… டைரியைப் பார்த்து நான்கூட சொல்லி விடுவேன்… உங்களுக்கு ஞாபக மறதி அதிகமாகவே இருக்கிறது. ப்ரெயின் ஸ்கேன் எடுக்கும்படியாக இருக்கும். ஐயாயிரம் ரூபாய் வரை ஆகலாம்.”
“அவ்வளவா…” ராமு கவலையுடன் கேட்டான்.
“தவிர, இதற்கு ஒரே வழிதான் இருக்கிறது.”
“என்ன சார்…?”
“நீங்கள் உடனே ஒரு நல்ல மனோதத்துவ நிபுணரைப் பாருங்கள்…”
“அப்படியானால் நீங்கள்?” கோபத்துடன் கேட்டான் ராமு.
“நான் இங்கு கீழ் போர்ஷனில் குடியிருக்கிறேன். டாக்டர் மாடியில் இருக்கிறார்…” கலகலவென்று சிரித்தார் அவர்.