கட்டுரை

அவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தை தருமா !?

மனிதனது வாழ்வில் மகிழ்வைத் தொலைத்து மனநிம்மதியை இழக்கச் செய்து மனதைக்குன்ற வைத்து ஒருவனை மனநோயாளியாகக்கூட ஆக்கிவிடும் சக்தியொன்று இருக்கிறது என்றால் அது இந்த பாழாப்போன சந்தேகமெனும் தீராத நோயாகத்தான் இருக்கமுடியும்.

அனுதினமும் ஒவ்வொருவரும் ஏதாவது ரீதியில் சந்தேகப்பட்டுக் கொண்டுதான் வாழ்நாளைக் கடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

 » Read more about: அவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தை தருமா !?  »

கவிதை

உயிர் மூச்சு உள்ளவரை

அழகான கண்ணிமைகளில் ... அழுகைப்பூ பூத்திருக்கு !... விட்டுச்சென்ற உறவுகளெல்லாம் ... விண்ணிலே பூத்திருக்கு !... தனித்த வெண்ணிலவாய் ... வெள்ளிகளின் மத்தியிலே .. உண்ணா நோன்பிருந்து ..நீ , உடல் வருத்தி லாபமென்ன ?...

மரபுக் கவிதை

அழகு மலர்

விழியாலே கதைசொல்லும்
வெள்ளிநிலவே! உந்தன்
மொழிசொல்லும் கவிதையுமே
மெளனம்தானோ? வீணாய்ப்
பழிபோடும் எண்ணத்தின்
பார்வையிது, விழியில்
வழிகின்ற கவர்ச்சியிலே
வழிமாறும் மனமும்தான்.

கன்னத்தில் கைவைத்தக்
காரிகையே!

 » Read more about: அழகு மலர்  »

கதை

சமூக தளம் …

“எனக்கு அதுதான் காதல்ன்னு தோணிச்சு. அதுதான் இதுகெல்லாம் காரணமா மாறிடிச்சுன்னு நெனைக்கிறேன். எல்லார்கிட்டேயும் மன்னிப்புக் கேட்டேன். எல்லாரும் அவங்க மட்டும் நல்லவங்க போலேயும் நான் மட்டும் கெட்டவள் போலேயும் என்னை ரொம்ப உதாசினப் படுத்திட்டாங்க. எதோ தீராத நோய் வந்தது போலப் பார்க்கிறாங்க. நீ மட்டும்தான் குமுதா, எதுக்குடீ எங்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்கிற?. அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்னு கேட்டே. கொஞ்சம் ஆறுதலா இருக்கு. ஒரு நாள் என் வீட்டிற்கு வற்றியா?”

கவிதை

ஓர் ஊமையின் பாடல்!

செயற்கையாகிப் போன புன்னகையைக் கண்டு தாழ்வு உணர்ச்சிகள் நீளுகின்றன! விரக்தியின் உச்சப் படியில் நின்று கதறி சோகமாய் முகாரி இசைக்கிறது என் இயலாமை!

நூல்கள் அறிமுகம்

கவிதைகளுடனான கைகுலுக்கல் – ஒரு பார்வை

kavithaikaluudaana_kaikulukkal

இது பயனளிக்கும் ஓர் ஆவணம்

வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களின் ”கவிதைகளுடனான கைகுலுக்கள் – ஒரு பார்வை” என்ற இந்த நூல் வித்தியாசமானதும் வருங்காலத்தில் ஆய்வாளர்களுக்கு பயனளிக்கக் கூடிய ஓர் ஆவண நூலாகவும் திகழும் என்பதிலும் ஐயமில்லை.

 » Read more about: கவிதைகளுடனான கைகுலுக்கல் – ஒரு பார்வை  »

புதுக் கவிதை

இரட்டை மலர்

மொட்டிரண்டுப் பூத்திருக்கு
முறுவலையே காட்டிருக்கு,
கட்டிவெல்லக் கன்னமதில்
கனிமுத்தம் நாட்டிருக்கு.

சின்னஞ்சிறு பூக்களிங்கே
சித்திரமாய்ச் சிரித்திருக்கு,
வண்ணமலர்க் கோலமிட்டு
வானமதைப் பறித்திருக்கு.

பட்டுப்போன்ற மென்மையிலே
பளபளப்பாய்ப் பார்த்திருக்கு,

 » Read more about: இரட்டை மலர்  »

கவிதை

காற்றாடியின் இலட்சியப் பயணம் …

உள்ளத்தில் உரத்தை ஏற்றியது உறுதி கொண்டு விண்ணை நோக்கியது உற்சாகக் குருதி உடலை கிளர்ந்தது நம்பிக்கை ஒளி கொந்துதலால் தும்பிக்கை பலம் உந்துதலால் எம்பி எம்பி உயர எழுந்தது எதிர்படு இடர்களை கடந்தது எதிர்நோக்கு உச்சியை எய்தது

நூல்கள் அறிமுகம்

மகரந்தம் தேடும் மலர்கள் & புத்தகம் சுமக்கும் பூக்கள்

தாரமங்கலம் தமிழ்ச்சங்க செயலாளராக செயலாற்றும் இவர், பல்வேறு கவியரங்குகளிலும் பங்கெடுத்து, தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறார். இவரது புத்தகம் சுமக்கும் பூக்கள் மற்றும் மகரந்தம் தேடும் மலர்கள் இரண்டு கவிதைத் தொகுப்பினையும் ஊருணி வாசகர் வட்டம் பதிப்பித்திருக்கிறது.

கவிதை

தமிழர் திருநாள் திராவிடர் திருநாளல்ல‌

தமிழருக்கே இரண்டகத்தை செய்யும் பேதை திசையெட்டில் வாழ்வதற்கு விடவே வேண்டாம் தமிழ்மானம் இல்லாதான் வாழு தற்கு தகுதியில்லான் என்பதினை எண்ண வேண்டும் தமிழ்மானம் இல்லாதார் தமிழ கத்தில் திராவிடத்து நச்சுதனை நுழைய விட்டு தமிழ்மண்ணை மாசாக்கும் செய்கை தன்னை தணலெனவே நிமிர்ந்திங்கே எதிர்க்க வேண்டும்