கட்டுரை

குழந்தைகளின் விரல் சப்பும் வழக்கம் … தனிமையும் காரணம்!

குழந்தைக்குத் தூக்கம் வரும்போது தாயின் அரவணைப்பும் தாலாட்டும் கிடைக்காவிட்டால், விரல் சூப்பும் பழக்கம் ஏற்படுகிறது. சரியாகத் தூக்கம் பிடிக்காதபோது, சோர்வாக இருக்கிறபோது, போரடிக்கும்போது… இப்படிப் பல சூழல்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் ஒரு பாதுகாப்புக் கவசமாக நினைத்து, குழந்தை விரல் சூப்பத் தொடங்குகிறது.

கவிதை

துணிவு

சாவுக்குப்பயந்த கோழை உன்னுயிர் துப்பாக்கியின் பின்னால் வீர மரணத்தை விரும்பிய வீரனாக‌ நான் உன் துப்பாக்கியின் முன்னால்!!

கவிதை

ஒப்பனை கலைகிறேன்

நட்பும் சொந்தமும்... சிதறிப் போனது இனி தாய் வீட்டிலும் நான் விருந்தாளியாம் நாற்றங்கால் மாற்றி நடவு ஆகிறது போராடிக் கற்க வேண்டுமே பொருந்திக் கொள்ள கடைசியாய் அழுது கொள்கிறேன்

நேர்காணல்

கானகம் தந்த கவி நிலவு பன்முகக் கவிஞர் சக்தி ஜோதி

இயற்கையையும் அதனோடு இணைந்து வாழ்க்கையையும் விட்டு நாம் விலகிச் செல்வதும், இன்றைக்குப் பல்வேறு வகைகளில் சிக்கல் மிகுந்ததாய் அமைந்துவிட்டதுமான நமது வாழ்க்கைமுறையும் என்னைச் சலனப்படுத்திக் கொண்டிருக்கின்றது. சமூகத்தின் அனைத்து வகையான சிக்கல்களுக்கும் அன்பு ஒன்றே நிரந்தரத் தீர்வு எனவும் நான் நம்புகிறேன். காமம் இன்றிக் காதல் எவ்வாறு இல்லையோ அவ்வாறு குடும்பம், உறவுகள் இன்றிச் சமூகம் இல்லை. இந்த வரம்பிற்குள் இருந்து தான் வெள்ளிவீதியாரும், ஆண்டாலும் பாடினார்கள். அவர்களைப் பின்பற்றிச் செல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

கவிதை

தாயும் தாரமும்

" தாயுடன் தாரமும் ------ தக்கதோர் வாழ்வினைச் சேயுடன் சேர்ந்ததே ------ செல்வம் தரும்வாழ்க்கை . நோயுடன் நின்றிடில் ------ நோகாமல் சேவைசெய்யும் தாயுடன் தாரமும் ------ தருவரே நேசத்தை ."

கவிதை

தாயும் தாரமும்

தாய்மைக்கென்று தனி புகழில்லை // விலங்கும் தாயாகும் வியப்பில்லை // பெண்ணுக்குத்தாய்மை இயல்புநிலை // தாயா தாரமா பிரிப்பது பொருத்தமில்லை//

கவிதை

எதனினும் அழகிய தேசம் எனது

மதம் நம்மிடையே விரோதத்தை வளர்க்க எங்களுக்கு கற்றுத்தந்ததில்லை நாம் இந்தியரே, ஹிந்துஸ்தானமே நமது தாயகம். உலகின் மிகப் பழமையான கிரேக்கம் எகிப்து ரோமானிய நாகரிகங்கள் எல்லாம் சுவடேதுமின்றி காணாமல் போனாலும் எமது சொந்த அடையாளங்கள் மட்டும் இன்றும் நிலைத்திருக்கின்றன.

கட்டுரை

காகிதமா ? கணியமா ?

நூலாசிரியர் தமது நூலை எத்துணைமுறை வேண்டுமாகிலும் இணைய வழியாகவே திருத்தல், சேர்த்தல், நீக்கல் என உடனுக்குடன் புதுப்பிக்கலாம். மறுபதிப்புவரை காத்திருப்பது போன்றதல்ல மின்பதிப்புகள். ஒருமுறை இணைய தடத்தில் சேர்த்துவிடின், நூலானது உலகம் முழுதும் உலா வரும். யாரும், எங்கும், எந்நேரமும் நூலைப் பார்க்கலாம், வாங்கலாம், படிக்கலாம், கருத்துப் பதிவு செய்யலாம். இதற்கென கணினியிலும் கைபேசியிலும் மின்படிப்பானிலும் பதிவிறக்கம் செய்து சேமிக்கலாம். திருக்குறள் முழுதும் பலரது உரைகளுடன் கைபேசியில் பதிவிறக்கம் செய்து சேமிக்கும் செயலிகளைப் பலரும் இன்று பயன்படுத்துகின்றனர். பயணங்களில் படிக்க இது பேருதவியாய் இருக்கும். படிக்கும்போது குறளை பண்ணுடன் ஒலிக்கக் கேட்கலாம். வள்ளுவர் இன்றிருந்தால் எவ்வளவு மகிழ்ந்துபோவார் ! ‘எங்கும் நூலே, எவரும் படிக்கலாம்’ என்பதே மின்னூல் முழக்கமாகும் !