oppanaiஇன்றோடு எல்லாம் முடிந்தது
சிகரம் தொட வளர்த்த கனவுகளோடு
நட்பும் சொந்தமும்… சிதறிப் போனது
இனி தாய் வீட்டிலும் நான் விருந்தாளியாம்
நாற்றங்கால் மாற்றி நடவு ஆகிறது
போராடிக் கற்க வேண்டுமே பொருந்திக் கொள்ள
கடைசியாய் அழுது கொள்கிறேன்
இளவரசி ஒப்பனை கலைகிறேன்
நாளை முதல் நான் …
அவன் வீட்டு வேலைக்காரி!