உன் துப்பாக்கித்தோட்டாவின்
வேகத்தை விடவும்
நான் சுழற்றி வீசும் கற்களுக்கு
அதிக வேகம் உண்டு!!
உன் விரலுக்கும் விசைக்கும்
உள்ள தூரத்தைவிடவும்
நான் ஏவுகின்ற கல்லுக்கும் உன்
தலைக்கும் மிக நெருக்கம்
சாவுக்குப்பயந்த கோழை உன்னுயிர்
துப்பாக்கியின் பின்னால்
வீர மரணத்தை விரும்பிய வீரனாக
நான் உன் துப்பாக்கியின் முன்னால்!!
நீ இலக்கு வைத்த ரவைகள் என்னை
வந்தடையும் முன்னர்
ஈமானோடு நான் எடுத்தெறியும் கல்லு
தப்பாது உன் தலையே இலக்கு!!
2 Comments
சரஸ்வதி பாஸ்கரன் · ஜனவரி 29, 2016 at 14 h 21 min
மிகவும் அருமை
செந்தாமரைக் கொடி · ஜனவரி 29, 2016 at 15 h 46 min
அருமை