கவிதை

பெண் மனம்

பிரசவத்தின் வேதனைகள் அமுதென்று சுவைகாணும் கற்பதனை பழி சொன்னால் அவ்வலியில் உயிர் துறந்து நடை பிணமாய்  வலம் வந்து வெந்தாலும் பெண் பொன்னென்று பழி மறவாது சமர் செய்து வாகை சூடும் வலிமை கொண்ட பெண் மனது!

கவிதை

மகளிர் விதைத்திடும் மாண்பு

மாதர் தினமென்று போராடி யுகம்தாண்டி கைபெற்றும் இக்கணமும் புதுமைகள் செய்திடும் பதுமையாய் காணும் இன்னும் சில கண்கள் மீது தீயை மூட்ட ஆளேயில்லை!

கவிதை

கை(ஐ)விரல் மருதாணி

மருதாணி கொஞ்சம் தடுமாரி - உன் கன்னம் சிவப்பாகிப் போனதோ! மஞ்சல் முக மதியே நீ கண்கள் மறைத்தாய் நீ வெட்கம் நிறமாகி செக்கச்சிவப்பான உன் பொழிவதனை மருதானி கடன் வேண்டுமென்று கன்னம் தழுவாமல் கரங்களில் கவசம் செய்கிறாய்!

கவிதை

மருமகள்

மாமியார் உறவினை தாயேன ஏற்றிடும் மக்களில் இன்னுமோர் மகளவள்! - சீதனம் சுமந்தவள் புக்ககம் வருகையில் அகந்தையை செருப்பென மாற்றிடும்நல் குணத்தவள்! சுட்டிடும் வார்த்தைகள் மனதெல்லாம் எரித்தினும் சோகத்தை மறைத்துமே சிரிப்பாள் - கன்னம் வழிந்திடும் நீரினில் காயங்கள் போக்கிடும் வல்லமை படைத்துமே இருப்பாள் !

கட்டுரை

குழந்தைகளின் விரல் சப்பும் வழக்கம் … தனிமையும் காரணம்!

குழந்தைக்குத் தூக்கம் வரும்போது தாயின் அரவணைப்பும் தாலாட்டும் கிடைக்காவிட்டால், விரல் சூப்பும் பழக்கம் ஏற்படுகிறது. சரியாகத் தூக்கம் பிடிக்காதபோது, சோர்வாக இருக்கிறபோது, போரடிக்கும்போது… இப்படிப் பல சூழல்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் ஒரு பாதுகாப்புக் கவசமாக நினைத்து, குழந்தை விரல் சூப்பத் தொடங்குகிறது.