பச்சை பட்டுடுத்த மண்ணின்
வனப்பில் இச்சைக் கொள்ளா
கண்கள் இல்லை!

குனிந்து முத்தமிடும் அறுவடை
மங்கைக்கு உன் ஆடை மீது
எப்போதும் ஓர் பார்வை!

மங்கை முகப்பருவாய்
காலைப்பனித்துளியை
போக்கும் மென்சூரியக் கதிர்
வைத்திய மூலைகை உனக்கு !

மங்கை செங்கூந்தலாய்
வளைந்தே தொடரும்
வரப்பில் விளையாடும்
மாந்தர் நாங்கள்
உன் கூந்தல் பூக்கள் !

அழகெல்லாம் தன்னில் வைத்து
அமைதியாய் காற்றோடு
இசைப்பாடி தலையாட்டும்
வயல்வெளி அழகை
காண கண் கோடி வேண்டும்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஹைக்கூ

மலர்வனம் 8

ஹைக்கூ

ஷர்ஜிலா ஃபர்வின்
 1. மழைத்துளிகளை
  சுமந்து கொண்டிருக்கும்
  கார்காலச் சிலந்தி வலை.
 2. இலையுதிர்காலக் கிளை
  தண்டுகளெல்லாம் மின்னுகிறது
  வைகறைப் பனி.
 3. வானத்தில் நாற்று நட
  கால்களைப் கவ்விப் பிடிக்கும்
  சேற்று வயல்.
 » Read more about: மலர்வனம் 8  »

மின்னிதழ்

மலர்வனம் 7

ஹைக்கூ

வஃபீரா வஃபி

01.
தாவும் குரங்கு
நதியில் தலைமுழுகி எழும்
மரக்கிளை

02.
நண்பகல் வேளை
சக்கரங்களிடை சிக்கித் தவிக்கும்
வண்டி நிழல்

 03.

 » Read more about: மலர்வனம் 7  »

அறிமுகம்

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

 » Read more about: வாழ்வி(ய)ல் வசந்தம்!  »