20160413_1932வல்லான் அவனின் வழித்தோன்றி
வாழ்வைக் கொள்ளும் பூமியிலே
எல்லா உயிர்க்கும் பிறப்பையொட்டி
இருக்கும் இனிய உறவுகளு முண்டு

கல்லா மாந்தர் என்றாலும்
கனிவுடனிருக்கும் சில உறவு
பொல்லார் ஆகிப் புறங்கூறும்
போக்கில் இன்னும் சில உறவு !

உற்ற உறவின் முதற்படியாய்
உன்னதமான உறவுகளாய்
பெற்ற தாயும் தந்தையென
பெருமை கொள்ளும் முதற்சொந்தம் !

குற்றம் சொல்லாக் குணத்துடனே
கூடப் பிறந்த தங்கைகளும்
பற்றுக் கொண்டு எப்போதும்
பாசம் காட்டும் நல்லுறவு !

இன்பம் துன்பம் எதுவென்றாலும்
இருக்கும் நல்ல உறவுகளும்
அன்புக் கூட்டின் அகல்விளக்காய்
ஆயுள் வரைக்கும் தொடர்ந்திருக்கும்!

சின்னச் சின்னச் சண்டைகளால்
சினத்தைக் கண்டும் பிரியாமல்
முன்னைப் பிறப்பின் தொடர்கதையாய்
முழுமை காக்கும் உறவுக‌ள் பல !

அண்ணன் என்று தம்பி ஈருயிராய்
பிறந்தால் கூட நிலையா உறவுண்டு
தீயாய் நின்று எரித்தால் கூட
சேர்ந்தே இருக்கும் உறவுகளுமுண்டு!

தாய் பிள்ளை சகோதரமாய்
தரணியில் வாழும் உன்னத உறவும்
அன்பைகாட்டும் அன்னிய உற‌வும்
பெற்றவர் கொண்ட வரமே!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.