பாக்களின் பெண்களை
பூக்களாய் பாடிடினினும்,
வாழ்வதனில்
வேம்பிலைச் சாற்றை
நுட்பமாய் புகட்டிடும்
சதிகார சமுதாயம்!
வீட்டுப்பெண் கணுக்கால்
மறைக்கும் ஆடவர்க்கு,
பிறவீட்டாள்
உடை அணிந்திடினும்
அதைவதைவாய் பாத்க்கும்
வக்கிரக் கண்!புக்ககம் செல்பவள்
பக்குவம் வேண்டும்
அவள் சிறுமியாகினும்
தாயாகவேண்டும்
துணையவன்
வழிகேட்டாள்
அது
புருச லட்சனம்!
பரிதாபம் நம் இனம்
இப்படி பரிகாரம்
சொன்னதும் பெண்ணினம்!!

இன்னும் உண்டே
இங்கு பல கோடி
அதில் பெண்ணுக்கும்
பங்குண்டு சிலகோடி!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

தம்பி… 9

வாழ்வாயே மகிழ்வாக வாழ்த்திடவே பெரியோர்கள் தாழ்வென்ற நிலையில்லை தளராமல் உழைத்திட்டால் ஏழ்மையென்னும் நிலையில்லை ஏற்றத்தைப் பெறுவாயே வீழ்வதெல்லாம் எழுவதற்கே வீறுகொண்டு எழுவாயே.

மரபுக் கவிதை

தம்பி… 8

ஏரோட்டம் இல்லையென்றால் ஏற்றமில்லை செல்வத்தில் தேரோட்டம் ஓடாது தெம்மாங்கும் கேட்காது காரோட்ட வாய்ப்பில்லை கஞ்சிக்கும் ஏமாற்றம் நீரோட்டம் காத்திட்டால் நிச்சயமாய் நன்மையுண்டே.

மரபுக் கவிதை

கீதாஞ்சலி

அரண்மனையும் தோரணமும் ஆடும் வாயில் அணியணியாய் மணிவிளக்கம்‌ ஒளிரும் கோவில் நிரல்நிரலாய் உன்னடியார் வந்து செல்லும் நெரிசலிடைப் போற்றிசெயும் ஒலி முழக்கம் கரைகாணாப் புகழ் வெளிச்சம் உனதேயாகக் கனிவுடனே என்முகத்தைக் காண்பா யோநீ தெருவினிலோர் மூலையிலே இசைக்கும் என்றன் சிறுகுரலை என்னரசே கேட்பா யோநீ