குழந்தை புட்டிப்பால் குடிக்கும்போது, புட்டியில் பால் காலியானதும் தாய் அதை அப்புறப்படுத்திவிடுகிறார். இதனால் குழந்தைக்குச் சுவைக்கும் இன்பம் நிறைவடைவதில்லை. இந்த ஏமாற்றத்தை ஈடுசெய்ய குழந்தை விரல் சூப்பத் தொடங்குகிறது.

குழந்தைக்குத் தூக்கம் வரும்போது தாயின் அரவணைப்பும் தாலாட்டும் கிடைக்காவிட்டால், விரல் சூப்பும் பழக்கம் ஏற்படுகிறது. சரியாகத் தூக்கம் பிடிக்காதபோது, சோர்வாக இருக்கிறபோது, போரடிக்கும்போது… இப்படிப் பல சூழல்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் ஒரு பாதுகாப்புக் கவசமாக நினைத்து, குழந்தை விரல் சூப்பத் தொடங்குகிறது.

வளரும் பருவத்தில் தாய், தந்தையின் பாசத்தைக் குழந்தை எதிர்பார்க்கிறது. அதற்குப் பேச்சுத் துணை தேவைப்படுகிறது. மற்ற குழந்தைகளுடன் விளையாட ஆசைப்படுகிறது. தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னைக் கவனிக்க வேண்டும் என்று குழந்தை விரும்புகிறது. இந்த வாய்ப்புகளும் எதிர்பார்ப்புகளும் நிறைவேறாதபோது, குழந்தைக்கு விரல் சூப்பும் பழக்கம் உண்டாகிறது.

விரல் சப்புதல் ஒன்று முதல் நான்கு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும். இதனால் எந்த தீமையும் ஏற்படாது. எனவே கவலைப்பட தேவையில்லை. தானாகவே இது சரியாகிவிடும். இதை பெற்றோர் அதிகமாக கண்டித்தால் நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?

ஐந்து வயதுக்கு மேல் தொடர்ந்தால் பல் முன்னோக்கி வளர்வது, முக அமைப்பில் மாற்றம், விரலில் காயம் மற்றும் சீழ் வைத்தல், குடலில் கிருமி போன்றவை ஏற்படலாம்

குழந்தைகளின் விரல் சூப்பும் வழக்கம்

குழந்தைகள் விரல் சப்புவது என்பது பெற்றேருக்கு தீர்வு காண கடினமான ஒன்றாகும்.இந்த பழக்கம் தாயின் கருவறையில் தனிமையை போக்க சிசு கையாளும் ஒரு யுக்தி .பிறந்த பின் குழந்தை தனிமையை உணரும் போது மீண்டும் அதையே செய்கிற்து.இதனால் ,காலபோக்கில் பற்கள் முரசு முன் தள்ளி வர வாய்ப்பு அதிகம்.

  • ஐந்து வயதுக்கு மேல் குழந்தை விரல் சப்பினால் அதனை சரி செய்ய முயற்சி செய்யலாம்
  • குழந்தை விரல் சப்பாமல் இருக்கும் நாட்களில் சிறிய பரிசு கொடுப்பதன் மூலம்விரல் சப்பாமல் இருக்க ஊக்க படுத்தலாம்
  • கையை சுத்தமாக வைப்பதன் மூலம் கிருமி பாதிப்பு வராமல் தடுக்கலாம்
  • சுத்தமான முறையில் சூப்பான் பயன்படுத்தலாம்
  • குழந்தையின் கவனத்தை வேறு விளையாட்டுகளில் திருப்புவதன் மூலம் மறக்க வைக்கலாம்
  • கைகளில் கையுறை அணிவிக்கலாம்

முயன்று பாருங்கள் !


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »