
மடந்தைகள் அழகென்று
மாண்புமிகு நிலைதன்னை
வேடிக்கையாக்கி பொய் வேஷங்கள் போடும்
பொய்யான உலகிது!
மாண்புகள் கேட்டிங்கு
ஏங்கிடும்
மாதர்கள் மாதவம் செய்தின்னும்
வரங்கள் கைவந்து சேரவில்லை!
ஏமாற்று நாளாக
மாதர்கள் தினம்தன்னில்
வாழ்த்துக்கள் மெய்காண
மங்கையை கிள்ளிடும்
நகங்களை நறுக்கவேண்டும்!
விதையாத மண்மீது
விதைந்திடும் விதை தூவி
பயன்தேடும் மூடர்கள்
விழிகளின் மீதிங்கு
கனவினை ஏந்திடும்
மாதர்கள் துயர் நீக்கின்
நாளை
விளைந்திடும் மகளிரின் மாண்புகள்!