Girl_5241wமருதாணி கொஞ்சம் தடுமாரி – உன்
கன்னம் சிவப்பாகிப் போனதோ!
மஞ்சல் முக மதியே நீ
கண்கள் மறைத்தாய் நீ
வெட்கம் நிறமாகி
செக்கச்சிவப்பான
உன்
பொழிவதனை மருதானி
கடன் வேண்டுமென்று
கன்னம் தழுவாமல்
கரங்களில் கவசம் செய்கிறாய்!
பெண்ணிவளில் பொற்கரங்களில்
சென் நிறத்தினில் செங்கதிரவன்
செங்கோடுகளாய் கோலமதுஇட்டு
வான் வெளிக்கையில்
வெட்க்கம் படை எடுக்கையில்
வேல் விழிகளை போர் தொடுக்காது
(கை)ஐ விரல் கொண்டு
அரண் செய்கிறாள்!