12801694_238703153144244_62174530001194204_nமரியானா ஆழி அஞ்சறை
பெட்டியாய்
ஆழங்கள் காணா மனமது
கொண்டவள் பெண்ணவள்
வதனத்தில் நவசரங்கள்
அரங்கேறும் அகத்தில்
புதையும் ஆசையும் கோபமும் மனதுக்குள்
இனங்கானாத தொல்பொருள் !

பிரசவத்தின் வேதனைகள்
அமுதென்று சுவைகாணும்
கற்பதனை பழி சொன்னால் அவ்வலியில்
உயிர் துறந்து நடை பிணமாய்
வலம் வந்து
வெந்தாலும் பெண் பொன்னென்று
பழி மறவாது சமர் செய்து
வாகை சூடும் வலிமை
கொண்ட பெண் மனது!

சீராக குலம் வாழ
அயர்வுக்கும் தலை
சாய்ந்து கண்மூடும் போதுன் உறங்காத
மனங்கொண்ட
நல் எண்ணங்கள் பாற்கடலாய்
உள் பொங்கும் கண்களில்
அனைத்து கொண்டு
கருணையின் விம்பமாய்
பொழிவுகளாய் பெண் மனது
பல முகம் கொண்ட
தடுமாறா எட்டாம்
அதிசயத்தின் மறு உருவாய்
பெண் மனது!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.