மாக்கோலம் போடுகின்ற மங்கையே – உன்
மனக்கோலம் என்னாயிற்று சொல்வாயே!
கலர்க்கோலம் போடுகின்ற காரிகையே – உன்
கனவுக்கோலம் என்னாயிற்று சொல்நீயே!

அதிகாலைத் துயிலெழுந்த அழகியே – உன்
அடிமனதில் உறங்குபவர் யாரோ?
பதுமையாய் முகங்காட்டும் பாவையே – உன்
பவளவிதழில் பந்திவைப்பவர் எவரோ?

மல்லிகையைச் சூடியிருக்கும் மாதவியே – உன்
மாமனவனை நினைக்கையிலே புன்சிரிப்போ?
கைவளையல் போட்டிருக்கும் கண்மணியே – உன்
கண்ணாடி வளையலுக்குள் காதலனா?

பாவாடைத் தாவணியில் பரிமளமே – உன்
பார்வையிலே விழுந்ததுவோ  எவர்மனமே!
பூவாடை வீசிவரும் பொன்மகளே – உன்
பூர்வஜென்மப் புண்ணியமே இவ்வெழிலே!

வாசலுக்கு வந்திருக்கும் வளர்மதியே – உன்
வாழ்க்கையிலே கரம்பிடிப்பார் எவர்மலரே!
பூரணமாய் ஜொலிக்கின்ற புதுமலரே – உன்
புன்னகையில் குடியிருப்போர் சொல்நிலவே!
tamilnenjam


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »