அப்பாவின் கையெழுத்து

வண்டுகடி பூ நிற
மதிப்பெண் அட்டை நீட்டி
” கையெழுத்து வாங்கிட்டு
வரச்சொன்னாங்க சாரு ”
அழுக்குடன் வெய்யிலில் கிடந்ததால்
மடமடத்து நிற்கும்
பாவாடை கசக்கி நிற்பேன்.

ஆணவம் தந்த தண்டனை

உடல் அழகு என்பது நிரந்தர மல்ல. அதை நம்பி மன அழகைப் புறக்கணிப்பவர்கள் வாழ்வில் நிம்மதியாக இருப்பதில்லை. சேற்றில் விழுந்து புழுக்களாய் நெளிய வேண்டிய நிலைதான் ஏற்படும். ஆணவக்காரியான தன் தோழி யின் வாழ்வில் ஏற்பட்ட சோக நிகழ்ச்சியை துயரத்துடன் விவரிக்கிறார் ஒரு சகோதரி

தமிழர் கூட்டம்

உலகம் எங்கும் படர்ந்த கூட்டம்
தமிழர் கூட்டம் – என்றும்
ஒருமைப் பாட்டைப் போற்றிப் பேணும்
புனிதக் கூட்டம்!

அண்டை, மேலை நாடு தோறும்
உழைக்கும் கூட்டம்! – என்றும்

அம்மா என்பது தமிழ் வார்த்தை

” அம்மா என்பது தமிழ் வார்த்தை. அது தான் உலகத்தின் முதல் வார்த்தை ” என்று ஒரு கவிஞன் பாடினான். அந்த வார்த்தையின் பெருமைதான் என்னே! பெற்ற தாயை அழைக்கும்போது ” அம்மா ” வருகிறது. உற்ற மாதரை அழைக்கும்போது அம்மா வருகிறது. தெய்வமும் அம்மா என்று அழைக்கப்படுகிறது. ஒருவனுக்கு அகத்தில் மகிழ்ச்சியையும் புறத்தில் சிறப்பினையும் தரவல்லது. (அம்+மா) அம்மா அழகும் பெருமையும் உடையது அம்மா.

அறிவோமே

பொன்னும் பொருளும் நிறைந்தாலும் போற்றும் அருளால் சிறந்தாலும் மின்னும் கல்வி இல்லாரை மேன்மை யாக எண்ணாரே! எண்ணும் எழுத்தும் கண்ணாகும் ஏனைக் கலைகள் பொன்னாகும்! மண்ணில் நன்றாய் வாழ்தற்கு வளரும் கல்வி பெறுவோமே! கல்வி அழகே அழகாகும் கற்க கற்க சுவையாகும்! செல்வத் துள்ளே அழியாத செல்வம் அதுவே! அறிவோமே!

சுடர்க தமிழ்நெஞ்சம்

பேரீச் சம்போல் சுவைகூட்டி,
பெரியோர் சொன்ன நெறிகாட்டி,
மாரி பொழியும் குளிராக
மனமே சிலிர்க்கக் கவிதீட்டி,
பாரி வள்ளல் கொடைபோல
வாரித் தமிழைப் படைத்திடுமே!
பாரீச் நகரில் பைந்தமிழைப்
பரப்பி மகிழும் தமிழ்நெஞ்சம்!

நட்பு வேண்டும்

மழலைப் பருவத்தில் பார்த்து வியக்க ஒரு நட்பு… குழந்தைப் பருவத்தில் ஓடி விளையாட ஒரு நட்பு… காளைப் பருவத்தில் ஊர் சுற்ற ஒரு நட்பு… வாலிபப் பருவத்தில் பேசி ரசிக்க ஒரு நட்பு… முதிர்ந்த பின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு… நட்புகள் ஆயிரம் இருந்தும் நட்பின் தேவை குறையவில்லை… தேவையின் போது தோள்களில் Read more

தமிழ்நெஞ்சம்

மானம் காக்கும் அறநெஞ்சம் – உலக
மனத்தைக் கவரும் அறநெஞ்சம்
ஈனப் பகையைத் தொடாநெஞ்சம் – நலம்
இயற்றும் கடமை கெடாநெஞ்சம்.

நீதி வகுத்த நன்நெஞ்சம் – சங்க
நெறிநூல் தொகுத்த பொன்நெஞ்சம்
ஆதி நெஞ்சம் இந்நெஞ்சம் – வேறு
அதற்கீ டாவ தெந்நெஞ்சம்?

வெள்ளை இருட்டில் ஒரு கருப்பு வெளிச்சம்

அந்தப் பிப்ரவரி மாதத்துப் பிரெஞ்ச்சு வானம் சாம்பல் நிறத்தைக் சாசுவத மாக்கிக் கொண்டிருந்தது. இரண்டு மாதகாலமாகவே இருட்டுச் சுருணைக்குள் சூரியப் பந்து சுருண்டு கொண்டது. காலை எட்டரை மணி அளவில் இரவு இருட்டு இலேசாக விளகிப் பகலிருட்டாகும். அதற்குத்தான் இங்கே விடியல் என்று பெயர். அதைக்கூட டெலிவிஷன் அறிக்கையை வைத்துத்தான் தெளிவாகச் சொல்ல முடியும். இந்த Read more