கட்டுரை

அம்மா என்பது தமிழ் வார்த்தை

" அம்மா என்பது தமிழ் வார்த்தை. அது தான் உலகத்தின் முதல் வார்த்தை " என்று ஒரு கவிஞன் பாடினான். அந்த வார்த்தையின் பெருமைதான் என்னே! பெற்ற தாயை அழைக்கும்போது " அம்மா " வருகிறது. உற்ற மாதரை அழைக்கும்போது அம்மா வருகிறது. தெய்வமும் அம்மா என்று அழைக்கப்படுகிறது. ஒருவனுக்கு அகத்தில் மகிழ்ச்சியையும் புறத்தில் சிறப்பினையும் தரவல்லது. (அம்+மா) அம்மா அழகும் பெருமையும் உடையது அம்மா.