பொன்னும் பொருளும் நிறைந்தாலும்
போற்றும் அருளால் சிறந்தாலும்
மின்னும் கல்வி இல்லாரை
மேன்மை யாக எண்ணாரே!
எண்ணும் எழுத்தும் கண்ணாகும்
ஏனைக் கலைகள் பொன்னாகும்!
மண்ணில் நன்றாய் வாழ்தற்கு
வளரும் கல்வி பெறுவோமே!
கல்வி அழகே அழகாகும்
கற்க கற்க சுவையாகும்!
செல்வத் துள்ளே அழியாத
செல்வம் அதுவே! அறிவோமே!