காட்டுக்கு வேட்டையாட வந்திருந்த தன் எஜமானனுக்காக புதரில் மறைந்திருந்த ஒரு முயலை விரட்டு, விரட்டு என்று விரட்டிற்று ஒரு நாய்.

ஓடி ஓடிக் களைத்த முயல் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்று, அட, இனத் துரோகி! என்னைப் போல் நீயும் ஒரு மிருகம், உன்னைப்போல் நானும் ஒரு மிருகம். கேவலம், ஒரு சில எலும்புகளுக்காக என்னை நீ இப்படிக் காட்டிக் கொடுக்கலாமா? என்று கேட்டது.

காட்டிக் கொடுத்தால் இனத் துரோகி! காட்டிக் கொடுக்காவிட்டால் எஜமானத் துரோகி. இதில் எது தருமம் எது அதருமம்? என்று நீதான் சொல்லேன்! என்று அதைத் திருப்பிக் கேட்டது நாய்.

முயல் விழிக்க, அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். நீங்கள் உங்களுடைய கடமையைச் செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள்! என்றது ஒரு கழுகு, அங்கிருந்த ஒரு மரக்கிளையில் அமர்ந்தபடி.

சரி, இப்போது ஓடுவதுதான் என் கடமை! என்று சொல்லிக்கொண்டே முயல் ஓடிற்று.

என் கடமை உன்னைத் துரத்துவதுதான்! என்று சொல்லிக்கொண்டே அதைத் துரத்திற்று நாய்.

டுமீர்! என்று ஒரு சத்தம். சுருண்டு விழுந்த முயலைப் பாய்ந்து வந்த கழுகு தன் காலால் இறுகப் பற்றிக்கொண்டு மேலே பறந்தது.
இதைக் கண்டதும் ஒரு கணம் திடுக்கிட்டு நின்ற நாய், மறுகணம் தன்னைத் தானே சமாளித்துக்கொண்டு சொல்லிற்று: இது பலனை எதிர்பாராமல் செய்யும் கழுகின் கடமைபோலும்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..