தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின். உடனே முடியாதென சொல்லிவிட வாயெடுத்த மஹ்ஜபினை ஒரு வருடத்திற்குள் தனக்கு எந்த முடிவும் சொல்ல வேண்டாம் என ஒரு கோட்டுக்குள் நிறுத்தி வைத்தான்.

மார்க்கத்தை மீறி காதலை ஹராமாய்த் தொடர அவனுக்கு விருப்பமும் இல்லை. மஹ்ஜபினை அவன் வற்புறுத்தப் போவதுமில்லை.

அவள் அவனது மூச்சுக்காற்றில் நிறைந்திருந்தாலும் அவளை விட்டு அவன் விலகியே இருந்தான்.

விலகி இருப்பதால் நேசத்தில் குறைவு உண்டானதென எந்த வரலாறும் சொன்னதில்லை.

அவளது முகம் அறியாத காலத் தில் அவள் தான் தன் மனைவியாக வரவேண்டும் என பிரார்த்திக்க ஆரம்பித்து காத்திருந்தவன் அவன்.

இன்னும் ஒரு வருடம் காத்திருப்பது என்பது அவனுக்கு அத்தனை சுமை யில்லை. இறைவனிடம் பாரத்தை போட்டுவிட்டு அவள் சொல்லப்போகும் ஒரு வார்த்தைக்காக காத்திருந்தான்.

பட்டென ஒரு நொடியில் முடியா தென சொல்லி விட முடியாமலே இந்த ஒரு வருடமும் ஒரு வித அச்சத்தோடு கழிந்து சென்றது மஹ்ஜபினுக்கு

அவர்களது பல்கலைக்கழக வாழ்க்கை நிறைவுறும் தருணம் நெருங்க, நெருங்க மஹ்ஜபின் என்ன சொல்லப் போகிறாள்…

என்னிதயம் துடி துடிக்க இல்லை யென்று சொல்லிப் போவாளோ என படபடத்தது கஷ்வினின் உள்ளம்.

சொல்ல வந்த விடயத்தை சொல்ல வும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இதயச் சுமையினை யாரிடமும் இறக்கி வைக்கவும் முடியாமல் இந்த ஓரிரு நாட்களுக்குள் பாவப்பட்டு போய் நின்றாள் மஹ்ஜபின் .

பிரியாவிடை விழா ஆரம்பமானது.

சக மாணவர்களும் அவரவர் பங்கிற்கு ஏதோ ஒவ்வொரு நிகழ்ச்சிகளை நிகழ்த்திச் சென்றார்கள்..

சிலர் தங்களுடைய வாழ்க்கையை யும் கடந்து வந்த பாதையில் சந்தித்த தடைகளையும் தாண்டி சாதித்து நிற்பதை புன்னகையும் கண்ணீரும் மல்க கொட்டித் தீர்த்தார்கள்.. அடுத்து கஷ்வினுக்கான வாய்ப்பு வழங்கப்பட மேடை ஏறிய கஷ்வின் மஹ்ஜபின் சொல்லப் போகும் அந்த ஒற்றை வார்த்தையிலேயே நின்று தள்ளாடினான்.

‘‘மஹ்ஜபின் உயிர் குடிக்கும்…
தேவதை..!!
என் ஆன்மாக்குள் ஒளிரும்
அசரீரி… மஹ்ஜபின்…!!!

புரியாத மொழியால்
என் புலன்களில் ஊடுருவிய
காற்று… மஹ்ஜபின்…!!!

ஏலேலங் காற்றில்
எழுத்து வைத்து செய்த…
குரலோ…?

வெட்டும் பார்வை…
என்னைத் தொட்டுச் செல்லும் .
சொட்டு மொழி கேளடி…

தரை மீது நிழல் தொடரக் கேளடி
விழியும் வழியும் மொழியும்
வேதாந்தம் மஹ்ஜபின்….!!!

என் தேசத் காற்றில்
விசாலித்து சுவாசிக்கும்…
இதயமே… மஹ்ஜபின்…!!!

இன்றேனும் சொல்லு கண்ணே…!!!
கண்ணிரண்டில் நான் தவழும்
கன்னி மொழிக் காதலை…
உன்னிரு உதடுகளால்…

‘‘ஷாலினி… என்ன பழசெல்லாம் ஞாபகம் வந்திருச்சா…’’

‘‘இருக்காதா. எட்டு வருசத்துக்கு பிறகு இன்னைக்குத் தான நாம எல்லாரும் ஒன்னா கூடியிருக்கம்…’’

திடீரென ரேணுகாவின் குரல் கேட்டதும், சுய உணர்வுகளுக்குள் மீண்டு வந்த ஷாலினிக்கு எல்லாம் இன்று நடந்தது போல் தான் இருந்தது. வருடங்கள் ஓடியதே தெரியவில்லை.

‘‘யெஸ்… இங்க தான் நான் ரீஸாவையும் கடைசியா மீட் பண்ணினன்… எங்க இருக்கா… என்ன ஆனான்னு எதுவுமே தெரியாமலே இந்த எட்டு வருசமும் ஓடிட்டு… இன்னைக்காவது எனக்கு ஏன்ட ரீஸா திரும்ப கிடச்சிட மாட்டாளான்னு இருக்கு…’’

எட்டு வருட ஏக்கம் எதிர்பார்ப்பு மஹ்ஜபின் என்ற கேள்விக்கு விடை தெரிய அவள் துடிக்கும் துடிப்பு அந்தந்தப் பொழுதுகளுக்குத்தானே தெரியும்.

‘‘மெக்ஸிமம் நம்ம பெட்ச்ல எல்லா ரும் வாரதாத்தான் இன்பர்மேஷன் வந்திச்சு… சம்டைம் ரீஸாக்கும் மெஸ்ஸேஜ் போய் இருந்தா அவளால வராம இருக்க முடியாது… கண்டிப்பா வருவாள்…’’

ரேணுகா எவ்வளவுதான் உறுதி யாக ரீஸா வருவாள் என நம்பினாலும் ஷாலினியின் மனமோ அவள் வரமாட்டாள் என அடித்துக் கொண்டது…

இன்று அக்கல்லூரியின் பவள விழாக் கோலம் காண, பழைய மாணவர்கள் அனைவரும் அழைப்பு விடுக்கப் பட்டி ருந்தார்கள். .அதன்படி ஒவ்வொரு வராக கல்லூரிக்கு வருகை தந்த வண்ணமே இருந்து கொண்டிருந்தார்கள்.

இந்த எட்டு வருடத்தில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொரு விதமாக மாறி இருந்தது. சிலர் குடும்பத்துடனும் சிலர் தனியாகவும் சில பெரிய தொழிலதிபர்களாகவும் உயர் அதிகாரிகளாகவும்… வெளிநாடுகளில் இருந்தும் பல பழைய மாணவர்கள் வருகை தந்திருந்தார்கள். ஆனாலும் ரீஸாவினுடையதும் கஷ்வினுடையதுமான வாழ்க்கையின் சுவாரஸ்யத்தை அறிந்து கொள்வதே விழாவுக்கான பலருடைய வருகையாகவும் இருந்தது.

ரீஸாவை அந்த டைரியை வாசிக்க விட்டிருக்கவே கூடாது அந்த டயரிதான் அவளுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி விட்டது என்ற ஒரு வித உணர்வு ஷாலினியை விட்டு விலகாமல் இன்று வரை அப்படியே அவளுடைய உள்ளத்தைத் துளைத்துக் கொண்டே இருந்தது.

என்னதான் கஷ்வின் தன் மீது கொண்ட கபடமில்லாத தூய அன்பையும் நேசத்தையும் (ரீஸா) மஹ்ஜபின் புரிந்து கொண்டாலும் அவளுக்கு அந்த காதலில் நம்பிக்கை இல்லை .தனது திருமணத்தை பொறுத்த வரை அதை தனது பெற்றோரின் விருப்பத்திற்கே விட்டிருந்தாள்

இலைமறைக் காயாக இத்தனை நாட்களும் அவளை ஒளிந்திருந்து பார்த்த டயரி அப்போதுதான் அவளுக்கு முகம் காட்டுகிறது. பொருட்களோடு பொருட்களாக ஒதுங்கி கிடந்த டயரி அவள் கண்களுக்கு தென்பட்டது.

இதுவரை அவள் அந்த டயரியை திறந்தது கூட கிடையாது. தனது தாயின் ஞாபகமாக அந்த டயரியினை பல வருடங்களாக தன்னோடு பத்திரப் படுத்தி கொண்டு இருக்கிறாள்.

இதுவரை அதை திறந்து பார்க்கும் எண்ணம் அவளுக்கு வந்ததும் இல்லை. அதை அவள் பத்திரப்படுத்தியதோடு நின்று விட்டாள். இன்றுதானா அவளுக்கு அதைப் படிக்கும் எண்ணம் தோன்ற வேண்டும். விதி விளையாட ஆரம்பித்து விட்டால் யாரால் தான் என்ன செய்ய முடியும்.

டயரியை திறக்கிறாள் புன்னகை மாறாத தாயின் புகைப்படம் கண்டு முத்தமிட்டவள் முழுவதாய் அதற்குள் தொலைகிறாள். அவள் எந்த காதலில் நம்பிக்கை இழந்திருந்தாளோ அந்த காதலை மார்க்க வரையறைகளை கடக்காமல் அனுமதிக்கப்பட்ட அடிப்படை யில் இரு வீட்டாரின் சம்மதத்துடனும் தொடர்ந்த தாயின் கடந்த கால வாழ்க்கைக்குள் நுழைகிறாள்.

முகம் காணாமல் குரல் கேளாமல் தொடர்ந்த அந்த நேசத்தில் தன்னையும் அறியாமல் பறிபோனாள் மஹ்ஜபின். ‘அவர்… அவர்..’ என ஆரம்பான ஒவ்வொரு பக்கத்திலும் அளவில்லாத அன்பையும் ஈடு இல்லாத அக்கறைகளையும் கொட்டி தீர்த்த வரிகளை மனம் உவந்து ரசித்தாள்…

இந்தளவுக்கு அன்பால, தான் உம்மாவும் வாப்பாவும் எப்பவுமே சண்ட பிடிச்சுக் கூட பார்த்ததில்ல…

‘‘ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சிகிட்டு விட்டுக் கொடுத்து வாழ்றாங்க… ரியலி க்ரேட்…’’ எண்ணிக் கொண்டவாறே பெருமூச்சிட்டாள்…

டயரியின் மிச்சம் மீதி உள்ள பக்கங்களை தொடர்ந்து புரட்டினாள். மகிழ்ச்சியால் அச்சிடப் பட்ட பக்கங்களில் சிறிதே கண்ணீரும் நிரப்பப்பட்டிருந்தது. அவளது தாய்க்குத் திருமணம் நிச்சயிக்கப் பட்டதால் அவளது உயர் தரப் படிப்பும் இடை நிறுத்தப்பட்டு வீட்டோடு அடை பட்டிருந்த அவளது தாய்க்கும் குடும்பத்தினருக்கும் பேரிடியாக வந்திறங்கியது அந்த செய்தி

தொடரும் 

 முன் தொடர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 15

15

இப்ப, நாம நிற்கிறது மேற்கு தொடர்ச்சி மலை. தானே..?’ என்றாள் சக்தி…

‘ஆம்..! இந்த பொதிகை மலையும், மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி.தான்..!’ சக்தி…

‘சரி, நேரம் ஆச்சு..! 

 » Read more about: யாளியும்… சக்தியும்… 15  »