தொடர் – 01

 

“ரீஸா… ரீஸா கொஞ்சம் வைட் பண்ணு நானும் வந்துற்றன்….”

“ஆஹ்…. சீக்கிரமா வா… லேட் ஆகுது.”

“ஏய்… கஷ்வினுக்கு அப்படி என்னதான் செல்லப் போறா…” என்று ஒரு வருடத்திற்கு முன் காதலும் கதையுமாக ரீஸாவின் முன் வந்து நின்ற கஷ்வினைப் பற்றித் தான் கேட்டுக் கொண்டே ஓட்டமும்  நடையுமாக ரீஸாவைப் பின் தொடர்ந்தாள் ஷாலினி

யார் இந்த ரீஸா…..?

அழகும் அறிவும்  கண்ணியமும் திறமைகளும் நிறைந்த ஒரு பக்குவ தேவதை என்றே சொல்லலாம். பார்ப்போர் பலரையும் இலகுவில் கவர்ந்து விடும் பேச்சு… குழந்தைகளையும் விஞ்சி விடும் குறும்புத் தனங்கள்.. எதையும் சமாளிக்கும் புன்னகை என அத்தனை குணாதிசயங்களையும் ஒன்று திரட்டி அவளின் அமைப்பில் பூமியில் உலா வருவதாய் பார்ப்போர் பலரையும் வியக்க வைக்கும் பேரழகி அவள்.

அவளுக்கு பின்னால் ஆண்கள் பலரும் காதல் என்று திரிவதில் ஆச்சரியமில்லை. என்றாலும் கஷ்வினுக்கு அவள் மேல் காதலானது தான் ஆச்சரியம்.

இந்தப் பாறையும் கரையுமா என்ற சந்தேகத்தை சுக்கு நூறாக்கி தரை மட்டமாக்கியவளே ரீஸா தான்..

பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த நாட்களில் இருந்து சகல விதத்திலும் கஷ்வினுக்குப் போட்டியாக முன்னனி பெறும் ரீஸாவும், எதையும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத அவள் இயல்பும்.. திமிர் பிடித்த ஒருத்தியாக அவளை கஷ்வினுடைய உள்ளத்திற்குள் சித்தரித்து வைத்திருந்தது.

ரீஸா அப்படி இப்படி பேரழகி பண்பானவள் என தன் நண்பர்கள் புகழ்ந்து தள்ளும் சந்தர்ப்பங்களில் எல்லாம் வெடுக்கென முகத்தை திருப்பிக் கொண்டு அந்தந்த இடங்களில் இருந்து கஷ்வின் தன்னை அப்புறப்படுத்திக் கொள்வான்.

அவளோடு பேசாமல் பழகாமல் அவளைப் புரிந்து கொள்ளாமலே  கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் குறுகிய கண்ணோட்டத்தில் அவளை கீழ்மையாக கருதிக் கொண்டே இருந்தான். பின்னாட்களில் அவளுக்காகவே துடித்தழப்போவதை அறியாமல் அவளையே நொந்து கொண்டிருந்தான் .

மறுபக்கம் அவளோ இப்படி ஒருவன் தன்னை வெறுப்பது கூடத் தெரயாமல் தன்னுடைய இயல்புப் போக்கிலே இருந்து கொண்டிருந்தாள். ..
காலங்கள் ஓட ஓட வைரத்தின் பிரகாசம் அவனின் உள் மனதில் பட்டுத் தெறிக்க ஆரம்பித்தது.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர், கஷ்வின் தன் தாயுடன வைத்திய மனைக்கு சென்றிருந்த சமயத்தில் எதேச்சையாக ரீஸாவையும் எதிர் நோக்க நேர்ந்தது. ரீஸாவைக் கண்டது தான் தாமதம் அவனது தாய் அவனையும் கடந்து ரீஸாவின் பக்கம் புன்னகை ஜொலிக்க விரைந்தாள்.

“எப்படி மன இருக்க…” என்றவாறே அவளைக் கட்டியணைத்து அவளது நெற்றியில் முத்தமிட்டாள் கஷ்வினுடைய தாய், .ஏதோ நெடுநாள் பழக்கமுள்ள போல் இருந்தது அவ்விருவருக்கும் இடையிலான நெருக்கம். அனைத்தையும் பார்த்து எதுவும் புரியாமல் சகித்துக் கொள்ளவும் முடியாமல் ஏதோ ஒரு கேள்வியோடு நின்றிருந்தான் கஷ்வின்.

“ஞாபகம் இருக்கா உனக்கு.?… நான் அடிக்கடி சொல்லிகிட்டே இருப்பனே மஹ்ஜபின் அது இவ தான் என அறிமுகப்படுத்தினாள் தாய்..”

“மஹ்ஜபினா….!…?….”

எப்படி மறந்திருப்பான் அவள் தானே அவனுடைய மொத்த ஜீவனிலும் இடையறாது ஓடிக் கொண்டிருப்பவள் ஒற்றை வேதாந்தம்..

ஆனால்….

“ரீஸா எப்படி மஹ்ஜபினானாள்…”

சாத்தியமே இல்லாத ஒன்று ஆனாலும் சாத்தியமாகி நிற்கிறது அவனது கண்களுக்கு முன்னாள்.

அவனால் கடுகளவேனும் கற்பனை பண்ணிப் பார்க்க முடியாத மஹ்ஜபினுடைய இடத்தில் தான் இந்த ரீஸாவினுடைய உருவம் நின்றிருந்தது.

தன்னோடு படிக்கும் சக மாணவனின் தாய் தானோ இவர் என நினைத்துக் கொண்டு கள்ளங்கபடமில்லாமல் நின்றிருந்தாள் மஹ்ஜபின் (ரீஸா).

இவ்வளவு தான் அது வரை அவள் அறிந்திருந்த பெயர் கூட ஞாபகம் இல்லாத கஷ்வின்

ஒரு விதத்தில் கஷ்வின் அவளுக்கு தூரத்து உறவு என்பதும் ஒரு திருமண வைபவத்தின் போது தான் அவனது தாயின் உள்ளத்திற்குள் ஆழ நுழைந்தது  இது வரையில் பேசு பொருளாக மாறிப் போயிருக்கிறாள்

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான்.

மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான்.

சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்….

யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..

அது நாள் வரையினில் அவன் பார்த்துக்கொண்டிருந்த ரீஸா நொடிப் பொழுதில் மறந்து போய் மஹ்ஜபினாய் அவள், அவனது இதய தேசம் எங்கும் விசாலமானாள்..

தன் தாயைத் தவிர எந்த ஒரு பெண்ணையும் ஏரெடுத்தும் பார்க்காதவன் கஷ்வின்.

தனது தாயை விடவும் நல்ல பெண்கள் இருப்பார்களா என்ற சந்தேகத்துடனும், இருக்கவே மாட்டார்கள் என்ற உறுதியுடனும் வளர்ந்த கஷ்வினுக்கு… அந்த தாயே ஒரு பெண்ணை புகழ்ந்த போதும் வார்த்தைக்கு வார்த்தை அவளைக் கொண்டாடிய போதும் அவள் யாரென்று கூட தெரியாமலே அவனுக்குள் மஹ்ஜபின் துளித் துளியாய் நுழைந்து இன்று அவன் புலன்களில் நிறைந்திருக்கிறாள்.

தேடலாகத் தொடர்ந்த இப்பெரும்  நேசத்தின் துளிர்ப்பு ஒரு பாவமும் அறியாத அவ்விருவர் வாழ்க்கையிலும் திருப்பங்கள் திருக்கரங்களில் புகுத்தக் காத்திருந்தது…

தொடரும் 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 15

15

இப்ப, நாம நிற்கிறது மேற்கு தொடர்ச்சி மலை. தானே..?’ என்றாள் சக்தி…

‘ஆம்..! இந்த பொதிகை மலையும், மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி.தான்..!’ சக்தி…

‘சரி, நேரம் ஆச்சு..! 

 » Read more about: யாளியும்… சக்தியும்… 15  »