ஆன்மீகம்

புனிதப் பயணம்

சாந்திச்ச ரணா லயமாம் – ஹஜ்ஜில்
      சாரும் புவியின் முதலா லயமாம்
ஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே – அருள்
      இறங்கிடும் ஹாஜிகட்கு நன்மையும் பாங்கே

தந்தைஇப் றாஹிம்பாங் கோசை –

 » Read more about: புனிதப் பயணம்  »

வெண்பா

அளவிலா அருளாளன் ஒருபா ஒருபஃது

காப்பு

பார்வைக்கு மெட்டாப் பரம்பொருளே நின்னருளால்
சோர்வுகள் நீங்கிச் சுகம்பெறவே – தீர்க்கமாய்
உன்னருளை வெண்பாவாய் உன்னதமாய்த் தீட்டிட
உன்னருளை வேண்டுகி றேன்!

நூல்

அண்டம் முழுதும் அழகாய்ப் படைத்ததில்
வண்ணங்கள் தீட்டிடும் வல்லோனே –

 » Read more about: அளவிலா அருளாளன் ஒருபா ஒருபஃது  »

மரபுக் கவிதை

பனிமலையில் பிறந்தவளோ?

பளபளக்கும் பாவையிவள்
பாதரசத்தில் குளித்தவளா?
படபடக்கும் விழிகளோடு
பனிமலையில் பிறந்தவளா?

கூந்தலில் மல்லிகையைக்
குடியிருக்க வைத்தவளே!
காந்தமானக் கண்களிலே
கவர்ந்திழுக்கும் கனிச்சுளையே!

பாவாடைத் தாவணியில்
பருவத்தைக் கட்டிவைத்து
பூவாசம் வீசுகின்ற
புதுப்பெண்ணும் நீதானோ?

 » Read more about: பனிமலையில் பிறந்தவளோ?  »

அறிமுகம்

வலைக்குள் மலர்ந்த வனப்பு

பாலமுனை பாறுக் சேர் அற்புதமான, அருமையான மனிதர். கவிதைத்துறையைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு கடல். நூலின் மீதான சிறு குறிபொன்றை கவிதை வடிவில் இங்கு வரைகிறேன் .இந்த முயற்சி மஹாகவி உருத்திர மூர்த்தி ,குறிஞ்சித் தென்னவன்,

 » Read more about: வலைக்குள் மலர்ந்த வனப்பு  »

மரபுக் கவிதை

முகத்தொகை

(தரவு கொச்சகக் கலிப்பா)

புலர்பொழுது சூரியனை புள்ளினங்கள் எழுப்பிவிட
      மலர்முகைகள் மடல்திறந்து மணம்வீசி மகிழ்ந்தாட
செம்முளரி முருக்கவிழ்க்கும் ஞாயிற்றின் வருகையிலே
   

 » Read more about: முகத்தொகை  »

குடும்பம்

தூக்கம் தொலைத்த இரவுகள்

கடைசியாக இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது? என உங்களுக்கு நினைவிருக்கிறதா?

கடந்த 20 ஆண்டுகளில் நாம் தூங்கச்செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதைக் கவனித்து இருக்கிறீர்களா?

 » Read more about: தூக்கம் தொலைத்த இரவுகள்  »

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 6

கம்பனின் கவித்திறன் அவனது இராமயணக் காவியம் முழுவதிலுமே காணக் கிடைக்கிறது.

அதிலும் ”கோலம் காண் படலம்” ….அருமையிலும் அருமை.

இராமன் வில்லொடித்தப்பின் தசரதன் முதலானோர் பெண் பார்க்கும் படலமாக அமைந்துள்ளது.

 » Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 6  »

பகிர்தல்

சிற்றிதழ்கள் உலகம் சரிந்தது!

அஞ்சலி

வரம்போடு தம்வாழ்வை
    வகுத்தளித்து வாழ்ந்துவந்த
பெரம்பலூரில் பிறந்திட்ட
    பெருவைரம் இராமதாசு,
உரமாக இருந்துவந்து
    உயர்வான சிற்றிதழைத்
தரமான எழுத்துகளால்
 

 » Read more about: சிற்றிதழ்கள் உலகம் சரிந்தது!  »

புதுக் கவிதை

சுதந்திரம்

செந்நிறக் குருதிதனை
சீதனமாய் பெற்றன்று
வெண்ணிறத்தோலுடையான்
விட்டுசென்ற பசுமை நீ…

பன்னிற மொழியுடையோர்
பாரதநிறம் சேர்த்து
கண்ணிறச் சக்கரம் சுழன்ற
காண்போரின் முத்திரை நீ…

 » Read more about: சுதந்திரம்  »

புதுக் கவிதை

அவன் என் மூத்த சகோதரன்

அவனை நான் அக்கா
என விளிப்பது அவனுக்கு பிடிக்கும்.

அவன் என் மூத்த சகோதரன்.

கொஞ்சம் கொஞ்சமாக
பெண்ணாகிக் கொண்டிருந்தான்.

படுக்கையில் விலகித்தெரிந்த
அவன் கொலுசுக் கால்களை
பார்த்துவிட்டு முதன்முதலில்
அதிர்ச்சியானவன் நான்தான்.

 » Read more about: அவன் என் மூத்த சகோதரன்  »