செந்நிறக் குருதிதனை
சீதனமாய் பெற்றன்று
வெண்ணிறத்தோலுடையான்
விட்டுசென்ற பசுமை நீ…
பன்னிற மொழியுடையோர்
பாரதநிறம் சேர்த்து
கண்ணிறச் சக்கரம் சுழன்ற
காண்போரின் முத்திரை நீ…
மண் நிறக்கடை எல்லை
மதிற்ச்சுவர் முன் நின்று
பொன்னிற ஒளிதனிலே
மின்னிடும் முச்சுடரே…
அந்நிய நிறத்தோனிடம்
அடிமை நிறம் இல்லையென
உன் நிற ஒளி வீசும்
ஒப்பில்லா முகவரியே…
எம் தேச நிறமென்றும்
எக்கு திக்கும் புகழாட
உம் கோசக்குரல் வழியே
உரக்கச்சொல் சுதந்திரமே…