கம்பன் கவிநயம்… தொடர் – 11

கம்பனின் கவியாற்றல் ஒரு வியப்புக்குறியாகவே இன்றளவும் உள்ளது. தமிழ் மொழியைக் கையாண்ட விதம், சொற்களை சொக்கட்டான் போல் விளையாடி கையில் எடுத்து கவிதைக்குள் பின்னி வைத்த அழகு வெறும் வார்த்தைகளால் நம்மால் சொல்ல முடியவில்லை. அவ்வளவு திறன்மிகு படைப்பு இராமாயண காவியம். இலக்கியம் என்று சொன்னால் இலங்கு பொருள் எடுத்தியம்பும் நயம் என்றே சொல்லலாம். மூக்கறுபட்ட சூர்ப்பனகை இலங்கைமாநகர் அடைந்து தனது சோகக் கதையை அண்ணன் இராவணனிடம் கூறும் போது Read more

மண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில்

விளக்கொளியில் மறைந்திருக்கும் மையிருட்டில் பொலிவிழந்த முகங்களின் அடையாளங்கள் நிலைத்திருக்கும்! தெளிவற்ற சிந்தனைக்குள் செயல்பாட்டின் விரல்கள் எல்லாம் முடங்கியிருக்கும்! ஒன்று கூடிப் பேசினாலும் முடிவற்ற சூழலுக்குள் பொய்மையும் புறங்கூறலும் மண்டிக்கிடக்கும்! இலக்கற்ற பயணங்களில் எண்ணற்ற பாதைகளின் குறுக்கீடுகளின் ஆளுமை குவிந்திருக்கும்! வண்ணமற்ற ஓவியத்தில் எண்ணமதை ஈர்க்காத கிறுக்கலின் வெளிப்பாடுகள் ஒளிந்திருக்கும்! புனரமைத்திடா புராதான சான்றுகளில் கலாச்சார படிமங்கள் பொதிந்திருக்கும்! வடித்துவைத்த சிலைக்குள் சிற்பியின் கைவண்ணம் எழிலோடு பரிமளிக்கும்! பேசும் மொழிகளுக்குள் பிழையில்ல Read more

யாராவது தூண்டிலோடு வருவார்களா?

ஒரு ஜன்னலின் கதவொன்றில் தெரிகிறது அவளின் நிழலாடும் உருவம்… இரவுநேர வெப்பச் சலனத்தில் கிணற்று நீரில் எத்தனை முறை குளிப்பது சலித்துக்கொள்ள முடியாத உடல்சூட்டில் தணியாத பெண்மையின் படைப்பு பகலில் கூட தூங்கமுடியாது இனம்புரியாத கனவுகளை ஏற்க மறுத்தாலும் பருவத்தின் பிடிக்குள் சிக்கித் தவிக்கவே செய்கிறது மனத்தின் கெண்டைகள் மீண்டும் ஜன்னலின் கதவிடுக்கில் பார்த்துக் கொண்டே விம்முகிறாள்… யாராவது தூண்டிலோடு வருவார்களா? துன்பக் கடலின் மீது வலைவீசி என்னை பிடிக்க!

கம்பன் கவிநயம்… தொடர் – 10

கம்பனின் கவிநயத்தில் உவமைகள் நாணித் தலைகுனிகின்றன… ஆம்… வியப்பாக இருக்கிறதா ? தமிழின் அமுதத்தைப் பருக இராமாயணக் காவியத்தை கம்பன் நமக்கு அளித்த கொடை என்றே கூற வேண்டும். கம்பனின் நயமிக்க வார்த்தைகளில் உவமைகளும் விலகிச் செல்கின்றன…. இளையபெருமாள் இலக்குவனால் மூக்கறுபட்டு அவமானம் தாங்காது இலங்கை நகர் புகும் சூர்ப்பனகை தனது அண்ணன் இராவணனின் காலடியில் வந்து வீழ்கிறாள். இந்த அவல நிலைக்கு யார் காரணம் ? என வினவும் Read more

கம்பன் கவிநயம்… தொடர் – 9

கம்பன் தனது இராமாயணக் காவியத்தில் நதிகள், ஆறுகள், கடல் போன்றவற்றின் எழில் தோற்றத்தையும், இராமன், இலக்குவன் சீதை ஆகியோர் கண்ட அந்த ஆற்றின் தன்மை, மேன்மை மற்றும் வளமை பற்றியும் தனது கவித்திறனால் அழகுற வடித்துள்ளார். நதிகளில் சிறந்தான சரயு நதியை பற்றிக் கூறும் போது நம் கண் முன்னே அந்த வளமையான கட்சிகள் விரிகின்றன. சரயு நதி புலவர் பாடும் புகழ் மிக்க ஆறாகும்.இமயமலையின் கண் தோன்றும் இந் Read more

காலமெல்லாம் தமிழ்

தமிழில் ஹைக்கூ கவிதைகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியத் தொன்மைமிகு செம்மொழித் தமிழ் வளமையுடன் காலம் காலமாய்ப் பொலிவோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இயல் இசை நாடகம் என முத்தமிழில் மொழியின் பரிணாமத்தை காலமெல்லாம் கண்டும் கேட்டும் படித்தும் உணர்ந்தும் மகிழ்வெய்தும் உலகின் கோடான கோடி தமிழ் நெஞ்சங்கள், கவிதைகள் வழி மொழியின் அடர்த்தியை அன்றாடம் உள்வாங்கி வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சங்ககால மரபுக்கவிதைகள், இருபதாம் நூற்றாண்டு புதுக்கவிதைகள் மற்றும் நவீனத்துவ Read more

கம்பன் கவிநயம்… தொடர் – 8

அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்; இராமாயணக் காவியத்தில் கம்பர் இராமனை தெய்வநிலையில் இருந்து மானிடனாக இறங்கி வந்த கருணையுள்ளம் படைத்தவன் என நமக்கு தெளிவுறுத்துகிறார். வால்மீகி இராமயாணத்தில் குகனை பற்றி அவ்வளவாக கூறவில்லை. கங்கையைக் கடக்க உதவியவன், இராமன் மீது அளவுகடந்த பற்றினால் இராமனுக்கு உதவியவன் என்றே சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் கம்பர் தனது காவியத்தில் குகனுக்கு ஒரு படலத்தை கொடுத்து அவனது சிறப்பியல்புகளை Read more

கம்பன் கவிநயம்… தொடர் – 7

கம்பராமாயண அனைத்துப் பாடல்களிலும் விரவிக் கிடக்கிறது. இனிய ஓசை நயமிக்க கம்பனின் கவிதை வரிகள் யுகம் யுகமாய் நிலைத்து நிற்கும் ஆற்றல் மிக்கவை. கம்பனின் கவிதை வரிகளில் குவிந்துள்ள சொற்கள் களஞ்சியமாய் திகழ்கின்றன. சூழல், காலம், நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு வடிக்கப்பட்ட கம்பராமாயணப் பாடல்கள் பலராலும் ஆய்வு செய்யப்பட்டு இன்றளவும் பேசப்பட்டு வருவது மிகச் சிறப்பு. “வண்ணம்” எனும் சொல் கொண்டு கம்பன் தனது பாடலில் பாதி இராமாயணத்தை Read more

காலமெல்லாம் தமிழ் – தமிழில் ஹைக்கூ கவிதைகள்

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியத் தொன்மைமிகு செம்மொழித் தமிழ் வளமையுடன் காலம் காலமாய்ப் பொலிவோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இயல் இசை நாடகம் என முத்தமிழில் மொழியின் பரிணாமத்தை காலமெல்லாம் கண்டும் கேட்டும் படித்தும் உணர்ந்தும் மகிழ்வெய்தும் உலகின் கோடான கோடி தமிழ் நெஞ்சங்கள், கவிதைகள் வழி மொழியின் அடர்த்தியை அன்றாடம் உள்வாங்கி வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சங்ககால மரபுக்கவிதைகள், இருபதாம் நூற்றாண்டு புதுக்கவிதைகள் மற்றும் நவீனத்துவ கவிதைகளை வாசித்த மக்களுக்கு Read more

நீறு பூத்த நெருப்பு

ஏழை மாணவர்களுக்கு எழுத்தறிவித்த இறைவன்! இலவச மதிய உணவுத் திட்டத்தால் எங்களின் வயிற்றுப் பசியை மட்டுமல்ல அறிவுப்பசியையும் தந்தாயே… தென்னாட்டுக் காந்தியே… காமராசா ! பகுத்தறிவு பகலவனாய் பெண்களுக்கு சுயமரியாதை இயக்கம் கொடுத்து சமூக நீதிக்கு அடையாளம் கொடுத்தாயே வைக்கம் வீரனே தந்தைப் பெரியாரே…! இருமொழிச்சட்டம் கொணர்ந்து மொழி இலக்கோடு பயணம் தொடங்கி சென்னை மாகாணத்தை தமிழ்நாடென தலைநிமிரச் செய்தாயே அறிஞர் அண்ணாவே…! காட்டுப்பன்றிகள் குதறிய அவலமாய் இன்று கல்விகொள்கை Read more