விளக்கொளியில் மறைந்திருக்கும்
மையிருட்டில் பொலிவிழந்த முகங்களின்
அடையாளங்கள் நிலைத்திருக்கும்!
தெளிவற்ற சிந்தனைக்குள்
செயல்பாட்டின் விரல்கள் எல்லாம்
முடங்கியிருக்கும்!
ஒன்று கூடிப் பேசினாலும்
முடிவற்ற சூழலுக்குள்
பொய்மையும் புறங்கூறலும்
மண்டிக்கிடக்கும்!
இலக்கற்ற பயணங்களில்
எண்ணற்ற பாதைகளின்
குறுக்கீடுகளின் ஆளுமை
குவிந்திருக்கும்!
வண்ணமற்ற ஓவியத்தில்
எண்ணமதை ஈர்க்காத கிறுக்கலின்
வெளிப்பாடுகள் ஒளிந்திருக்கும்!
புனரமைத்திடா புராதான
சான்றுகளில் கலாச்சார
படிமங்கள் பொதிந்திருக்கும்!
வடித்துவைத்த சிலைக்குள்
சிற்பியின் கைவண்ணம்
எழிலோடு பரிமளிக்கும்!
பேசும் மொழிகளுக்குள்
பிழையில்ல சொற்களோடு
இலக்கணமும் பிறப்பெடுக்கும்!
மண்சார்ந்த கலாச்சாரம்
தொலைத்துவிட்ட வாழ்வுதனில்
தரமற்ற உருக்குலைந்த
திட்டங்கள் துரத்திவரும்!
Categories: புதுக் கவிதை