திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100
பாடல் – 100 பத்திமை சான்ற படையும் பலர்தொகினும் எத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்தமைந்த எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும் மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு. (இ-ள்.) பத்திமை சான்ற – (தம்மேல்) அன்பு நிறைந்த, படையும் – சேனையும்; பலர் தொகினும் – பகைவர் பலர்கூடி எதிர்ப்பினும், எத்துணையும் – எவ்வளவும், அஞ்சா – பயப்பட வேண்டாத, எயில் அரணும் – மதிலரணும்; வைத்து – வைக்கப்பட்டு, அமைந்து Read more
