பளபளக்கும் பாவையிவள்
பாதரசத்தில் குளித்தவளா?
படபடக்கும் விழிகளோடு
பனிமலையில் பிறந்தவளா?

கூந்தலில் மல்லிகையைக்
குடியிருக்க வைத்தவளே!
காந்தமானக் கண்களிலே
கவர்ந்திழுக்கும் கனிச்சுளையே!

பாவாடைத் தாவணியில்
பருவத்தைக் கட்டிவைத்து
பூவாசம் வீசுகின்ற
புதுப்பெண்ணும் நீதானோ?

கண்ணாடி பார்க்கின்ற
கன்னியுந்தன் பார்வையிலே
முன்னழகு எல்லாமே
முழுமையாய்த் தெரியுதடி!

உன்மார்பில் ஊஞ்சலாடும்
ஒற்றைமணி ஆரமுமே
பெண்பார்க்க சொல்லுதடி
பேரழகை அள்ளுதடி.

பால்குடத்தில் நீந்திவரும்
பனிநிலவாய் நீயிருக்க
சேல்விழியின் துணையோடு
செகமுழுதும் ஆள்பவளே!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »