கவிதை
தமிழர் கூட்டம்
உலகம் எங்கும் படர்ந்த கூட்டம் தமிழர் கூட்டம் - என்றும் ஒருமைப் பாட்டைப் போற்றிப் பேணும் புனிதக் கூட்டம்! அண்டை, மேலை நாடு தோறும் உழைக்கும் கூட்டம்! - என்றும்
உலகம் எங்கும் படர்ந்த கூட்டம் தமிழர் கூட்டம் - என்றும் ஒருமைப் பாட்டைப் போற்றிப் பேணும் புனிதக் கூட்டம்! அண்டை, மேலை நாடு தோறும் உழைக்கும் கூட்டம்! - என்றும்
" அம்மா என்பது தமிழ் வார்த்தை. அது தான் உலகத்தின் முதல் வார்த்தை " என்று ஒரு கவிஞன் பாடினான். அந்த வார்த்தையின் பெருமைதான் என்னே! பெற்ற தாயை அழைக்கும்போது " அம்மா " வருகிறது. உற்ற மாதரை அழைக்கும்போது அம்மா வருகிறது. தெய்வமும் அம்மா என்று அழைக்கப்படுகிறது. ஒருவனுக்கு அகத்தில் மகிழ்ச்சியையும் புறத்தில் சிறப்பினையும் தரவல்லது. (அம்+மா) அம்மா அழகும் பெருமையும் உடையது அம்மா.
பொன்னும் பொருளும் நிறைந்தாலும்
போற்றும் அருளால் சிறந்தாலும்
மின்னும் கல்வி இல்லாரை
மேன்மை யாக எண்ணாரே!
எண்ணும் எழுத்தும் கண்ணாகும்
ஏனைக் கலைகள் பொன்னாகும்!
மண்ணில் நன்றாய் வாழ்தற்கு
வளரும் கல்வி பெறுவோமே!
பேரீச் சம்போல் சுவைகூட்டி, பெரியோர் சொன்ன நெறிகாட்டி, மாரி பொழியும் குளிராக மனமே சிலிர்க்கக் கவிதீட்டி, பாரி வள்ளல் கொடைபோல வாரித் தமிழைப் படைத்திடுமே! பாரீச் நகரில் பைந்தமிழைப் பரப்பி மகிழும் தமிழ்நெஞ்சம்!
ஆல்பத்தில் சிரிக்கும் உறவு முகங்கள் ஆபத்தில் உதவிகேட்க அவசரமாய் இறுகும் மருந்து தடவி ஆறாத காயம் தந்தையின் கண்ணீர் துளிபட காணாமல் போகும்
மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு…
குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு…
காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு…
மானம் காக்கும் அறநெஞ்சம் - உலக மனத்தைக் கவரும் அறநெஞ்சம் ஈனப் பகையைத் தொடாநெஞ்சம் - நலம் இயற்றும் கடமை கெடாநெஞ்சம். நீதி வகுத்த நன்நெஞ்சம் - சங்க நெறிநூல் தொகுத்த பொன்நெஞ்சம் ஆதி நெஞ்சம் இந்நெஞ்சம் - வேறு அதற்கீ டாவ தெந்நெஞ்சம்?
அந்தப் பிப்ரவரி மாதத்துப் பிரெஞ்ச்சு வானம் சாம்பல் நிறத்தைக் சாசுவத மாக்கிக் கொண்டிருந்தது. இரண்டு மாதகாலமாகவே இருட்டுச் சுருணைக்குள் சூரியப் பந்து சுருண்டு கொண்டது. காலை எட்டரை மணி அளவில் இரவு இருட்டு இலேசாக விளகிப் பகலிருட்டாகும்.
» Read more about: வெள்ளை இருட்டில் ஒரு கருப்பு வெளிச்சம் »
புதிதாக மணமான இளந்தம்பதிகள். இல்லறப் பூங்காவில் துள்ளியோடும் புள்ளிமான்கள். எந்தெந்த வழியில் இன்பம் கிடைக்கின்றதோ அதை அனுபவிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் இளஞ்சிட்டுகள்.
அன்றையதினம் அவர்கள் பெயருக்கு அஞ்சலொன்று வருகிறது. அதை ஆவலுடன் பிரித்துப் பார்க்கிறார்கள்.
» Read more about: அன்பின் பரிசு »
காலை நேரம். மணி ஒன்பதைத் தாண்டிவிட்டது. வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த பாஸ்கரன் சலிப்புடன் எழுந்தான். அவன் முகத்தில் சோகத்தின் சாயல். ஏமாற்றத்தின் பிரதிபலிப்பு. வழக்கமாக நேரத்திற்கு வரும் தபால்காரன் வரக்காணோம். நெடுநேரமாக வீட்டிற்குள் போவதும்,
» Read more about: விதியின் விளையாட்டு »