நான் கஷ்டப்படும் போது விதிப்பயன் என்று விட்டு விடலாம். என்னுடைய ஒரு துளி கண்ணீரைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அம்மா எனதாசை அம்மா.

எனது முக வேறுபாட்டைக் கண்டவுடன் வாடிடும் அனிச்ச மலரல்லவோ அம்மா எனதாசை அம்மா.

தனது உடலைக் கொத்தி தன் இரத்தத்தை உணவாக தன் குஞ்சுகளுக்கு தரும் அன்றில் பறவை போல் தன் வாழ்க்கையை தியாகம் செய்தவளல்லவோ அம்மா எனதாசை அம்மா.
ஆயிரம் தவறுகள் செய்தாலும் அடிக்காமல் அன்பு காட்டி அகிம்சை வழி வந்த அண்ணல் காந்தி போல் பொறுமையின் பூமியல்லவா அம்மா எனதாசை அம்மா.

நான் சிரித்தால் சிரிக்கும், அழுதால் அழும் கண்ணாடி போல் வாழ்க்கையின் இலட்சியமே தன் மக்கள்தான் என்று நினைப்பவளல்லவா அம்மா எனதாசை அம்மா.

நாவடக்கம், களவாமை, கீழ்படிதல் போன்ற நற்பண்புகளை – உலகப் பொதுமறை திருக்குறள் போல் நடந்து காட்டி போதித்த ஆசிரியையல்லவா அம்மா எனதாசை அம்மா.

இதயத்தில் இருப்பதை புரிந்து எழுதும் கரம் போல புரிந்து செயல்படும் நற் தோழியல்லவா அம்மா எனதாசை அம்மா.
பக்கங்கள் போதாது அம்மாவின் சிறப்பைச் சொல்ல…

இப்போது நானும் ஒரு தாய். அவளைப் போல – என் தாயைப் போல என்னாலும் நல்லதை கற்பிக்க இயலும் என நம்புபவளே இந்த புதிய அம்மா.

Categories: கட்டுரை

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »