கதை
வாக்குமூலங்கள்
எங்கள் பண்பாட்டிற்கு ஏற்றபடி சேலை கட்டு. உடம்பு தெரியம்படியான உடைகளை அணியாதே என்றால் 'நான் விரும்பிய உடையை உடுப்பதற்கும் உரிமையில்லையா?" என்கின்றாள். 'நீங்கள் சாரம் கட்டுகின்றீர்களே! இது எந்த சமூகத்தின் பண்பாடு" என்று குதர்க்கமாக கேட்கின்றாள். வீட்டு வேலைகளில் தனக்கு உதவுவதில்லை என்கின்றாள். எனக்கு உதவியாக இருக்கத்தானே உன்னைத் திருமணம் செய்தேன். நீ உனக்கு உதவிக்கு என்னைக்கூப்பிட்டால்? எனக்குத் தெரியாத வேலைகளை நான் எப்படிச்செய்வது? வீட்டு வேலைகளையெல்லாம் அம்மா எனக்கு பழக்கிவைக்கவில்லையே?