சமயம் படைக்கா பரமனையே
சாலப்பகன்றது தமிழ் நூலாம்
சமர்த்தாய் ஆரியன் கற்றானே
சமயம் அறிந்து தீயிட்டானே -பின்

வந்தாரும் தமிழ் அழித்தாரே
இரும்போர் சிலரும் பழித்தாரே
விரும்பாதாரும் வெறுத்தாரே
மறப்ப தெங்கனம் எம்மொழியாரே

நெடுங்கடல் ஓடியும் தழிழ் கூறு
செம்மொழி நம்மொழி எனக்கூறு
செவிகள் குளிர்ந்திட அதைக்கூறு
சிந்தை மகிழ்ந்திடும் விதம்கூறு

முது மொழி நம் மொழி மூல மொழி
பிறந்தன இதன்வழி பல மொழி
இதற்கிணை ஏது ஒரு மொழி
செகத்திற் அறிந்த தமிழ் மொழி

இயல் இசை நாடகம் தந்தனையே
இலக்கிய இலக்கியம் கொண்டனையே
காவிய காப்பியம் கண்டனையே
காதல் வரச் செய்தனையே

தமிழே தரணி வாழ்த்திட வா
தமிழ் இணம் ஓங்கி வளர்ந்திட வா
தலைமுறை தலைமுறை
தழைத்திடவா.

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.